பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படத்திறப்புவிழா என்கிற திட்டத்தை

அறிவித்து அதைத் தொடர்ந்து செயல் படுத்தி 
வருகிறார். 

"சுரதா தணிப் பயிற்சி கல்லூரி" என்று அவரது
பெயரைத் தாங்கிய கல்லூரியை டாக்டர்
எச்.ஜி. செல்வராஜ் திருச்சியில் நடத்தி 
வருகிறார். 

"உவமைக்கவிஞர் சுரதா மன்றம்" என்கிற 
அமைப்பு கள்ளக்குறிச்சியில் (தெ.ஆ.
மாவட்டம்) புலவர் டாக்டர் இரா. வீரன்
அவர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக
நடைபெற்று வருகிறது.

இவரது கவிதை அனைத்து இந்திய
மொழிகளிலும் ஆங்கிலத்தில் மொழி 
 பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.
 சென்னை, மதுரை பல்கலைக் கழகங்களிலும்,
 கேரள பல்கலைக்கழகம், மலேசியா, சிங்கை
 பல்கலைக் கழகத்திலும் இவரது நூல்கள்
 பாட நூலாக வைக்கப்பட்டிருக்கின்றன.
 
 உலகமகாவி ஷேக்ஸ்பியளின் அனைத்துப்
 படைப்புகளும் ஒரே புத்தக வடிவமாகி வெளி 
 வந்திருப்பதைபோல் இவரது படைப்புகள் 
 அனைத்தும் ஒரே புத்தகவடிவமாக உருவாகி 
 வருகிறது. 
 
 கம்பனின் மகன் அம்பிகாபதியைப்போல்