பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் : 75

அக்காரம் என்றதமிழ்ச் சொல்லுண் டென்றான்.

அதற்குப்பின் அவளிதழைக் கனிபோல் தின்றான்.

கல்வீரன் கண்களினால் கோடு போட்டான். கட்டழகி கால்விரலால் கோடு போட்டாள். வில்லாடும் புருவத்தாள் சொக்க வைத்தாள் விக்கலுக்கு நீர்கேட்டுச் சிக்க வைத்தான்.

- இதழ்: சுரதா(15-3-1968)

ಥಿನಾ।ಹಮ್

நீரூற்றி நகத்தை வளர்ப்பதில்லை-இன்ப நினைவுகள் பிறர்சொல்லிப் பிறப்பதில்லை!

-இதழ்: சுரதா(1-5-1968)

கண்ணில் கிடந்த கனவுகளே காலையில் நிமிரும் நினைவுகளாம்!

ք54-ւ

மரக்கிளை மலர்களோ மலர்ந்தால் மறுபடி குளத்து மலர்போல் கூம்புவ தில்லை. குறையிலார் நட்பும் கூம்புவ தில்லை.