பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

சுழலில் மிதக்கும் தீபங்கள்


‘நீங்க இவ்வளவுக்கு ஆண் எதிர்ப்பாளராக இருக்கக் கூடாது பஹன்ஜி?’ அபுவினால் இப்போது சிரிப்பை வர வழைக்க முடியவில்லை.

‘ரத்னா...எனக்கு உடனடியா ஒருவேலை, தங்குமிடம் வேண்டும். வக்கீல் மூலமாக என் சிடுக்கைத் தீர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எனது சர்ட்டிஃபிகேட், போன்ற பேப்பர்கள், துணிமணியெல்லாம் முதலில் எடுத்திட்டு வரணும். அதுக்கெல்லாம் நீங்க ஹெல்ப் பண்ணனும்...”

“டோன்ட் வர்ரி. அதெல்லாம் பாத்துக்கறோம். நீங்க ஒருவாரம் அமைதியாக ரெஸ்ட் எடுங்க...!’

“ரெஸ்ட் எடுக்கத்தானே போறேன்! படகு கரைக்கு வந்தாச்சு...”

“சாப்பிடுங்க முதலில்...”

முற்றிலும் புதிய சூழ்நிலைக்குக் கிரிஜா தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறாள்.


14

மாலைநேர நெருக்கடியில் பஸ்ஸில் இருந்து இறங்குவதே கடினமாக இருக்கிறது. சாலையோரங்களில் புழுதி பறக்குமளவுக்கு வெயில் தொடர்ந்து காய்கிறது. பெண்கள் விடுதி நிறுத்தத்தில், கலகலவென்று இறங்கிப் படிகளில் ஏறும் சில பெண்களுக்குக் கிரிஜா பார்த்தால் சிரிக்குமளவுக்குப் பழகி யிருக்கிறாள். யாரிடமும் யாரும் திருமண அந்தஸ்தை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், உள்ளே ஆண்கள் யாரும் வருவதில்லை. அபுகூட அன்று மேலே வர வில்லையே? வருபவர்கள் கீழே உள்ள பார்வையாளர்கள் வட்டத்தில் மட்டுமே இருக்கலாம். சாப்பாட்டுக் கூடத்தில்,