பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

115


காதலன் அடுத்த வீட்டில், இவளையே நினைச்சு உருகிட்டிருக்கிறான். சந்திக்கிறார்கள். கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். காதலன் சொல்கிறான்-உன் கழுத்தில் இருக்கிறதே அந்த...அவன் போட்டது. அதை நீக்கிவிடு. என்று.இவள் இவளால் அதைக் கழற்ற முடியவில்லை. அது புனிதமானது. மிகப்புனிதமானது. மனப்போராட்டம். அதை நீக்க முடியவில்லை. காதலனை மறுத்துவிடுகிறாள். விவாகரத்துக்குப் பிறகும் அவன் கட்டிய அது புனிதமாகக் கருதப்படுகிறது கிரிஜா, சபாஷ் ....”

கையைக் குலுக்குகிறாள் ரத்னா.

அந்தக் கதாநாயகிக்கு இரண்டு வயசு வந்த பெண்கள் இருந்தார்களா என்று கேட்கத் துடிக்கிறாள் கிரிஜா.

‘...சரி, இப்ப இதைக் கொண்டாடணும். ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவோம்...வா. ஆனி...?’

ரத்னா அவளையும் இழுத்துக் கொண்டு போகிறாள்.

அவள் சென்ற ஐந்து நிமிடத்துக்குள் உள்ளே...நார் மடிப்பட்டு முட்டாக்கு தெரிகிறது...மாயா...மாயா ஒரு பெட்டியைச் சுமந்துகொண்டு வந்து வைக்கிறாள். “தீதிஜி..?” என்று பெரிதாக அழுகைக்குரல் கொடுக்கிறாள். கிரிஜா திடுக்கிட்டாற்போல் நாற்காலியை இழுத்து நகர்த்தி விட்டு மரியாதையாக (பழக்க தோஷம்) நிற்கிறாள்.

“உட்காருங்கம்மா!”

“உட்காறதுக்கு என்ன இருக்கு? சர்ட்டிபிகேட், உன் சாமான் எல்லாம் இருக்கு...பாத்துக்கோ...ஆயிரங்காலத்துப் பயிர்னு நினைச்சேன். ஒரு நாழில அவச் சொல்லைத் தெறிச்சிட்டுப் போயிட்டே. புருஷனாகப்பட்டவன் கோபத்தில், நீ என்ன கிழிச்சேன்’னு சொல்றதுதான். அதை எல்லாம் மனசில, வச்சுக்கலாமா? உனக்கென்ன குறை வச்சிருந்தது? காசு பணம் குறைவா, நீ அதை செலவழிச்சே, இதை செல