பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சுழலில் மிதக்கும் தீபங்கள்

ஒழிய, பகல்ல சாப்பாடு போடறப்ப பார்த்தாதான் உண்டு. சித்தப்பிரமை புடிச்சாப்பல இருப்பார். இப்படி ஒரு ரெண்டு மாசம் தானிருக்கும். அப்ப இந்த சுவாமி எங்க ஊரில் வந்து தங்கி, காலை வேளையில, பஜணை பண்ணிண்டு போவார். மூணு நாளைக்குமேல தங்கமாட்டாராம் இவர். அந்த சுவாமி கிட்ட ரொம்ப ஈடுபாடா, பிட்சைக்குக் கூட்டிண்டு வந்தார். அப்பதான் இங்க இந்த ஆசிரமம் கட்டறா. சாமிஜி இவரிடம் அங்க வந்து சிலநாள் தங்குங்கோன்னு சொன்னார்னு நினைக்கிறேன். என்னைக் கூட்டிண்டுதான் வந்தார். அப்ப, இங்கே பாதையே கிடையாது. இப்படி ஹரித்துவாரத்தில் வண்டியை விட்டிறங்கி, சத்திரத்தில் மூட்டையை வச்சிட்டு ஸ்நானம் பண்ணப் போனோம். கையைப் புடிச்சுட்டு ஸ்நானம் பண்ணுங்கோன்னா. அப்பிசி மாசம் தீபாவளிக்கு முன்னே இருகரையும் பெருகும்.கங்கை கை இழுத்தது.

ஆனா, நான் நல்ல பலசாலி. இழுத்துட்டேன். எல்லாருமாகக் கரையில் என்னையும் சேர்த்து இழுத்தா. இந்தப் பக்கத்தில் கங்கையில் யாரானும் நழுவிட்டாக் கூடக் காப்பாற்ற மாட்டாளாம். ‘கங்கா மாதா வே ஜாதா?’ன்னு அதையே பாக்கியமாச் சொல்லிடுவா...அப்ப என்னமோ இழுத்துட்டா. அவருக்கு மூச்சே இல்லை... போயிட்டார்...

உலக இயக்கங்களே நின்று, சந்தடியற்ற ஒரு சூழலுக்குள் முன்பின் தொடர்பற்று, அவளும் அந்தக் கிழவியும் மட்டும் இருப்பதாகத் தோன்றுகிறது.

பாட்டி சட்டென்று மெளனமாகிறாள். அந்த மெளனத் தைக் கலைக்க கிரிஜாவுக்கு மனமில்லை.

‘இதோ இங்க...ஓம்...ஔஷதாலயான்னு போட்டிருக்கே, பார்த்தியா?’

‘ஆமாம்?’

‘அங்கே...அவருக்குப் பிறகுதான் பவானந்தான்னு வச்சிட்டு பெரிய சாமிஜி இந்த ஆசிரமத்தில சேர்த்தார். அப்ப