உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德

காதுக்கும் ஓலையாம் ; கழுத்துக்கும் ஓலையாம் : ஓலைத் தாலியே ஒப்பந்தத் தாலியாம்.

தங்கத் தாலிக்குத் தனிப்பெருமை வந்தபின், புகழ்பெற்று விளங்கிய புலிப்பல் தாலியும், ஓஐலத் தாலியும் ஒதுங்கிக் கொண்டன.

அரிச்சந்த்ர மன்னன் அரசாண்ட நாளில், ஊரறி யாமலே உட்தாலி கட்டும் வழக்க மிருந்து வந்த தாகவும், அல்லி ராணி அரசாண்ட நாளில், அந்த வழக்கம் அறவே மறைந்துபோய் இன்றுள்ள வழக்கம் ஏற்பட்ட தாகவும் தென்நாட்டுச் சுவடிகள் தெரிவிக் கின்றன.

தாலத்தால் ஆனதால் தாலி எனும்பெயர் அதற்கு வந்ததாய் அறிஞர்கள் கூறினும், தான்+நீ எனுஞ்சொல் தாலியென் றாகி இருக்கலாம் என்பதே என்கருத் தாகும்.

நான்நீ தனித்தனி, நங்கையே இன்று தான்நீ எனக்குநீ தையல் உனக்குநான்; நான்தான் நீ-இனி நான்தான் நீ-யெனும் தத்துவ விளக்கமே தங்கத் தாலியாம்!

தாலியே பெண்ணுக்கு வேலியாம்! அத்தகு வேலிவோர் ஆணுக்கும் வேண்டு மல்லவா?