பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4

மந்திரி மீதிலோர் மழைத்துளி வீழினும் அவரது படத்தோ டச்செய்தி வெளிவரும்

ஒளவையார் ஒருநாள் அந்தி மாலையில் திருக்கோயி லூர்க்குச் சென்றுகொண் டிருக்கையில் அடைமழை பெய்ததாம். அம்மழை தன்னில் நல்வழி ஒளவையார் நனைந்துவிட் டாராம்.

போலி ரவிக்கைப் பொட்டலம் காட்டும் ஒய்யார நடி கை உஷாநந் தினியும் நல்ல மழையில் நனைந்தாராம் ஓர்நாள்.

பல்வேஷம் போடும் பகட்டு நடிகைக்கு

ஜலதோஷம் பிடித்ததாம் தலைவலி எடுத்ததாம் !

நமது திரைப்பட நடிகையர் ஒருசிலர், உடம்பு வலித்தால் உடனே சொல்லுவர். தலைவலி வரினும் தவறாமல் கூறுவர். விவகாரம் முற்றி வேறுவலி எடுத்தால், பலரிடம் நெருங்கிப் பழகும் நடிகையர் சுலபமாய் அதனைச் சொல்லமாட் டார்களே !