உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ié

நிலத்திலே பிறந்து நிலத்திலே வாழும்நாம் குளத்திலோ ஆற்றிலோ குளிக்க வில்லையேல், மேனி அழுக்கும், வியர்வை நாற்றமும், போகுமா? போகவே போகா தாதலின் அன்றாடம் குளிப்ப தவசிய மாகும்.

பிழைபுரி யாத பெருந்தலைவ ராக விளங்கிய சர்தார் வேத ரத்தினம் அவர்களும், டாக்டர் அம்பேத்கார் அவர்களும், தாழ்த்தப் படாமல் தானே தாழ்ந்துள நீலக் கடலில் நீந்துதல் வழக்கமாம் !

அன்றைய சேதுபதி அரசருள் ஒருவர். உப்புக் கடலிலும் ஓடும் நதியிலும்,

நீண்ட நேரம் நீராடு வாராம் !

கள்ளும் காமமும் களிப்பதற் கிருந்தும், குளமும் நதியும் குளிப்பதற் கிருந்தும், கள்ளுண்டு ஞானியர் களிப்பது மில்லை! எஸ்கிமோ மக்கள் குளிப்பது மில்லை!

பனிக்கட்டி அரசன் பதினான்காம் லூயி, சிறப்பு நிகழ்ச்சிக்குச் செல்கையில் மட்டுமே கரத்தையும் முகத்தையும் கழுவிக்கொள் வானாம் ! ஆண்டுக்கோர் முறையே அவன்குளிப் பாம்!