பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

குறைந்தசட் டங்களும் நிறைந்த உரிமையும், உள்ள நாடே நல்ல நாடாம். ஓரிரு குழந்தைகள் உள்ள வீடே குடும்ப நலங்கள் குறையாத வீடாம்.

மகவைப் பெறாத மலடியை, வைதீக வடமொழி யாளர் வந்தியென் றழைப்பர்.

கருங்குயில் முட்டையைக் காக்கையடை காத்தல்போல் அடுத்தவள் குழந்தையை எடுத்து வளர்ப்பவள், காக வந்தியாம். கணிதரக் கூடிய வாழையோ தாரொன்று வழங்குதல் போல, வாழ்வில் ஒரேவொரு மகவைப் பெறுபவள் கதலி வந்தியாம். கண்ணும் கருத்துமாய் ஈன்ற குழந்தைகள் அனைத்தையும் இழந்து வேதனைப் படுபவள் மிருத வந்தியாம்.

மன்னன் கரிகாற் சோழனின் மனைவி பெண்குழந்தை ஒன்றை மட்டுமே பெற்றவள்.

வாரி வழங்கிய பாரியின் மனைவி இரண்டு பெண்களை மட்டுமே ஈன்றவள்.

கம்பன் மனைவியோ, அம்பிகா பதியெனும் ஆணையும் அடுத்தொரு பெண்ணையும் பெற்றவள்.

உண்டைக் கட்டிக்குத் துண்டு விரித்த குடுமிப் பார்ப்பனக் குசேலன் மனைவி ஈன்ற குழந்தைகள் இருபத் தேழாம் !