உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கூறியுள்ளது கற்பனையல்ல; உண்மையாக நடந்தவிஷயமாகும். அதைப்போலவே நீங்களும் நடக்கக் கடவீர்கள். அப்பொழுது உங்களு டைய அநுபவத்திற்குவரும். காரியத்தை வழிக்குக் கொண்டுவரு வது சிறிது கஷ்டமே. அது எனக்குத் தெரியும். ஆனால் நான் கூறும்படிச் செய்வது மிகவும் சுலபம் என்று நான் சொல்வேன். குழந்தை என்ன சொல்லிற்று. 18 ஆவது வயதில் கீல்கள் பிடிபட்டு நான் துன்பப்படுங்கால் என்னுடைய அண்டை வீட்டாள் ஒருத்தி அவளுடைய குழந்தையைச் சில மணிநேரம் எங்கள் வசத்தில் விட்டாள். மிக்க அழகாயுள்ள அக்குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்த கொஞ்சநேரம்வரையில் என்னுடைய நோவு சிறிது தணிவு அடைந்திருந்தது. இக்குழந்தை யானது மல்லார்ந்து படுத்துக்கொண்டு மாளிகையைப்பார்த்து அவ் வப்போது லா, லா, லா என்று சொல்லிக்கொண்டிருந்தது. குழந்தையின் துணிகளைக் கழற்றி விட்டு என்படுக்கையின் பேரில் அதை விடுப்படி என் வேலைக்காரிக்குக் கூறினேன். அவள் அங்கனமே செய்தாள். கூடியவரையில் முதுகைத் தூக்கிக்கொண்டு நான் குழந்தையின் அழகான சரீரத்தின் ஒவ்வொரு அவயவத்தையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது தன்னைக்கடவுள் எப்படிச்சிருஷ்டித்தாரோ அஃதே போல் சிறிதும் புரளாமல் இருந் தது. குழந்தையின் அங்கங்களை; கெட்டு, சுருங்கி, அழகு குறைந்து பிணம்போலுள்ள என்னுடைய அவயவங்களுடன் ஒற்றிட்டுப்பார்த் தேன். என்னுடைய சரீரத்தின் தன்மை எனக்கே அருவருப்பைக் கொடுத்தது. "குழந்தையானது கணப்பொழுது என்பக்கம்பார்த்து, திரும்பவும் தன்னுடைய வேலையைச் செய்ய ஆரம்பித்து லா, லா, லா, லா, என்று சொல்லத் தொடங்கிற்று. எனக்கு மிக்க ஸந்தோஷம் உண்டாகி அதைக் கேட்பதிலேயே என்கவனத்தைச் செலுத்தலானேன். அதற்குள்ளாக ஒரு விஷயம் என் நினைப்பிற்குவந்தது. "லா லா என்று குழந்தை சொல்லும் பொழுதெல்லாம் அதன் மேல் பாகத்து மூன்று பக்க எலும்புகளுக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டதை நான் கவனித்தேன். வேறு இடங்களில் இவ்வதிர்ச்சி ஏற்படவில்லை. நானும் அப்படியே கூச்சலிட்டுப்பார்த்தேன். என்னுடைய பக்க எலும்புகளுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் சிறிது விருப்பம் ஏற்பட்டது. பிறகு பூ, பூ, பூ என்று பலதரம் உச்சரித்துப்பார்த்தேன். இச்சமயம் அதிர்ச்சியானது சிறிது கீழே உண்டாயிற்று. குழந்தையும் இம்மாதிரி பூ, பூ, பூ என்று சொன்னால் என்னவாகும் என்பதை நன்றாகப்பரீட்சித்து அறிய விரும்பி அதற்கும் அம்மாதிரி கத்தும்படிக் கற்றுக்கொடுக்கப் பிரயத்தனப்பட்டேன். முதலில் அப்படிச் செய்ய முடியவில்லை. இரண்டு மணி நேரம் சொல்லிக் கொடுத்த பிறகு குழந்தையும் பூ, பூ, பூ என்று சொல்லத்தொடங் கிற்று. பிறகு அதற்கு அடிவயிற்றில் அதிர்ச்சி உண்டாயிற்று.