பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மெயில் (The over-seas Daily Mail) என்ற தினசரி பத்திரிகை யில் எழுதியிருக்கிறார். இப்பொழுது நம் நாட்டுப் பெண்களுடைய சரீர திடகாத்ரமானது அதிருப்திகரமாயிருக்கின்ற தென்பதை எல் லாரும் ஒப்புக்கொள்ளவே வேண்டும். அன்றியும் அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் எப்பொழுதும் வியாதிகளினால் துன்பப்பட்ட தாய் தந்தைகளுக்குப் பிறந்தவர்கள் என்பதும் நிஜமேயாகும். அன்றியும் பெரிய பெரிய நகரங்களில் பெண்கள் பாடசாலைகளில் காலை 3-மணி நேரமும் மத்தியானம் 3 மணி நேரமும் வீற்றிருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு மைதானங்களில் விளையாடத்தக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறதில்லை. பெண்கள் குத்துவது, அரைப்பது, நீர் சேந்துவது, துணி முதலியவற்றைத் துவைப்பது முதலிய வீட்டுக் காரியங்களை முன்காலத்தவர்களைப்போல் செய்கிறதில்லை . இக்காலத்துப் பெண்கள் மனைவிகளாகவும், தாய்களாகவும் தங்கள் காரியங்களை ஏற்றுக்கொள்ளும் சக்தியை யடைவதற்கு முன்னமே புஷ்பவதிகளாகிறார்கள். அன்றியும் நம்முடைய பெண்களில் பலர் க்ஷயம் முதலிய வியாதிகளுக்காளாகி அகால மரணமடைகின்றனர். நம்முடைய கன்னிகைகள் தாய்களாகித் தாங்கள் வகிக்கவேண்டிய குடும்பப் பொறுப்புக்கஞ்சி விவாகஞ் செய்துகொள்ள பயப்படுகிறார்கள். நம்நகரவாசிகள் சிசு மரணங்களைக்கண்டு மிக்க நடுங்குவது இக்காரணங்கள் பொருட்டேயாகும். நம்முடைய பெண்கள் சிறுவயதிலேயே குழந்தைகளைப்பெற்று அவைகளுக்குத் தாய்ப்பால் இன்றி மெல்லின்ஸ் முதலிய ஆகாரங்களைக் கொடுக்க நேரிடுகின்றது. தாய்களாக ஆவதற்குச் சக்தி அடைவதற்கு முன்னமே குழந்தைகளைப் பெறுவதே இதற்குக் காரணமாகும். ஐரோப்பா, அமெரிக்கா முதலிய கண்டங்களில் புருஷர்களைப் போலவே பெண்களையும் அவர்களுக்குச் சமமாகத் தங்கள் உயிரை "இன்ஷியூர் (Insure) செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியா தேசத்தில் கலியாணமாகியிருக்கும் பெண்களுடைய உயிரை “ இன்ஷியூர் செய்ய ஒப்புக் கொள்ளுகிறதில்லை. இம்மாதிரியான துயரமான நிலைமைகளைப்போக்க ஒரே ஒரு வழியிருக்கிறது. நம்முடைய சூர்ய நமஸ்காரங்களைப் போன்ற சாஸ்திரீகமான தேகப்பயிற்சிக்கிரமமொன்றை அவர்களுக்காகக் கற்றுக் கொடுப்பதேயாகும். இந்த நமஸ்காரங்களால் நம்முடைய பெண்