பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(8) உருசியான பதார்த்தங்கள்:- புதிதாகவும், பச்சையாகவும் சாப்பாட்டிற்கு அனுகூலமாயிருக்கும் கீரைகளையும் அவைகள் பலன்களையும், கந்தமூலங்களையும் முளைக்கிளம்பும்படியான தானியங்களுடன் உப்பு முதலியவற்றைச் சேர்த்துத் தின்றால் மிகவும் இனிமையாயிருக்கும். (9) பழங்களுக்குப் பதிலாக உபயோகிக்கத் தக்கவைகள்:- திராட்சை, மாம்பழம், கிச்சிலி, அத்தி முதலிய பழங்கள் வருஷத்தில் எல்லாக் காலங்களிலும் கிடைப்பதில்லை. ஆகையால் உளுந்து அப்பளம், வடாம், உசிலி முதலியவைகளைச்செய்து தின்றால் பழங்கள் தின்பதால் ஏற்படும் பிரயோசனங்கள் இவைகளாலும் சிறிது மட்டும் ஏற்படும். (10) தக்காளிப்பழம்:- இது மிகவும் புஷ்டிகரமானது. இதை அநேகர் உபயோகிக்கிறார்கள். ஜனங்கள் அப்பியாசத்தினால் இதன் உருசியைப் பழக்கிக்கொள்ள வேண்டும். இதில் சரீர புஷ்டிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான உப்பு முதலியவைகள் அதிகமாக இருக்கின்றன. பச்சையாகவோ, வேகவைத்தோ ருசிகரமான எல்லா பதார்த்தங்களையும் இதனால் செய்யலாம். இது நயமான தாயும், எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய தாயுமிருக்கின்றது. இதை அவரவர்கள் விருப்பத்தின்படி சர்க்கரையுடனோ உப்புடனோ சேர்த்துத் தின்னலாம். (11) முட்டைகள் (Eggs) முட்டைகளையாவது அவற்றின்கண் உள்ள மஞ்சள் பதார்த்தத்தையாவது உட்கொள்ள ஆட்சேப மில்லாதவர்கள் தின்னலாம். பாலை நீக்கினால் இதே சிறந்த உணவு. (12) சர்க்கரை (Sugar) சுத்தம் செய்யப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை நீக்கிவிடுதல் மிகவும் நலம். சிலமுக்கியமான காலங்களில் மாத்திரம் இதை மிகவும் மிதமாக உபயோகிக்கலாம். சுத்தஞ் செய்யப்படாத சர்க்கரை அல்லது தேனை உபயோகித்தல் நலம். ஆரோக்கியத்திற்குரிய விதி. எப்.சி. ஹேடாக் (F. C. Had dock) என்பவர் பவர் ஆப் வில் Power of will) என்ற புத்தகத் தில் கூறியிருப்ப தென்னவென்றால்:-"ஆகாரத்தை நம்முடைய தேகநிலைமைக்கும் நாம் செய்ய வேண்டிய காரியத்திற்கும் சரிபோகும்படிக் கிரமப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசுத்தமான ஜலத்தைத் தாராளமாய்க் குடிக்க வேண்டும். போதுமான வரைக்கும் அயர்ந்த தூக்கம் வரும்படிச் செய்து கொள்வதுமன்றி, தூங்கும் போது நிர்மலமான காற்று அதிகமாக இருக்க வேண்டும். சிலர் ஜலத்தை மிகவும் மிதமாகக் குடிக்கிறார்கள். அவர்கள் படுக்