பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

செந்தமிழ் பெட்டகம்

என்று சொல்லப்படும் மொழியாகும் ரிக்வேதத்தில் காணப்படும் சமஸ்கிருதமும் அவெஸ்தாவில் காணப் படும் ஈரானியமும் ஒரே பொருளின் இரு தோற்றங்கள் எனலாம் இரண்டோ ரொலிகளை மாற்றினால் ஒன்றை மற்றொன்றாக மாற்றலாம் உ-ம் சமஸ்கிருதத்தில் 'ஸ' என்பது அவெஸ்தாவில் ‘ஹ’ என்றும், ‘வ என்பது ‘ப’ என்றும் (ஹோம என்பது ஹோம என்றும், அச்வ என்பது அச்ப என்றும்) காணப்படும் வேதத்தில் உயர்வாகப் போறறப்படும் தெய்வத்தை அவெஸ்தாவில் தாழ்த்திடப் பேசுவதாலும், தேவர், அசுரர் என்ற சொற்களுக்குப் பொருள் ஒன்றில் உயர்வாகவும் மற்றொன்றில் தாழ்வாகவும் காணப்படுவதாலும், இவ்விரு வகுப்பினரும் ஒன்றாயிருந்து பிரிந்ததுமன்றி, வெகுகாலம் பங்காளிப்பகையும் கொண்டு சண்டையிட்டுக்கொண்டிருந்தரென்றும் சமஸ்கிருதப் புராணங்களுள் காணப்படும் பெருந் தேவாசுர யுத்தங்கள் இப்போர்களை நினைவூட்டுவன என்றும், இவ்வாறு அலெக்சாந்தர் காலம் வரைக்கம் ஈரானுக்கும் இந்தியாவற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததென்றும் தெரிகின்றன

வேத மொழிக்கும் அவெஸ்தாவிற்கும் இடையே இரண்டிற்கும் நெருக்கமான உறவுகொண்ட மொழிகள் தற்போதும் இந்தியாவின் வடமேற்கு எல்லையிலுள்ள காப்பிரி சாதியினரால் பேசப்பட்டு வருகின்றன இவற்றின் இலக்கணம் பாதி சமஸ்கிருதத்தையும் பாதி அவெஸ்தாவையும் ஒத்திருக்கிறது

இந்தோ-ஐரோப்பியத்தின் முக்கியக் குறிகள் : அகர, எகர, ஒகர உயிரெழுத்துககள் ஒன்றுகூடி ஒரே அகரமாய் மாறியிருப்பது, உயிர்மெய்களில் வரும் ர,ல மயக்கம் முதலியன