பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

127

பகையுள்ளவனாய் அவனால் அங்கதேசத் தரசனாகித் தேர்ப்பாகன் மகனென்ற இழிவை ஒருவாறு மாற்றிக் கொண்டான்

வியாச முனிவர் அருளால் அம்பிகையின் தாதியிடம் உண்டானவர் விதுரர் அவர் கெளரவர்கள் வகுப்பில் அளவிலா அறிவு படைத்தவர் அறநெறி தவறாதவர் கிருஷ்ணனிடத்தில் அந்தரங்கமான பக்தியுடையவர்

பீஷ்மர், சத்தியவதியின் சந்ததியாரே சந்தனுக்குப் பின் அரசுரிமை பெறவேண்டி, வாழ்நாள் முழுதும் பிரமசாரியாய் இருப்பதாக விரதம் பூண்டார் அந் நாளில் வில்வித்தையில் கைதேர்ந்தவர்களே உலக மதிப்பிற்கு ஏற்றவர்களாய் இருந்ததால், அந்தணர்களும் அவ்வித்தையைப் பயின்று தேர்ச்சியடைந்திருந்தனர் அவர்களில் துரோணாசாரியரும், அவர் மைத்துனர் கிருபரும், அவர் மகன் அசுவத்தாமனும் மிகவும் பேர் பெற்றவர்கள்.

துரோணாசாரியர் எல்லா வில்லாளிகளுக்கும் ஆசிரியராய் விளங்கினார் அக்காலத்து மன்னர்கள் சூதாட்டத்தில் அதிகப் பிரியமுள்ளவர்கள் ஆனால் துரியோதனன் தாய் மாமனான சகுனிக்கு இணையானவர்கள் எவருமிலர் யுதிஷ்டிரர் கவறாடலில் எந்த அளவுக்குப் பைத்தியம் கொண்டவரோ அந்த அளவுக்கு ஆடுவதில் திறமையில்லாதவர்; ஆடுவதற்கு அழைத்தால் மறுப்பதில்லை என்ற விரதத்தையும் கொண்டிருந்தார் பாண்டுவுக்குப் பிறகு குடும்பத் தலைவர் முறையில் அவரே அரசுரிமை பெறுவதற்கு உரியவரானாலும், துரியோதனனுடைய நிர்ப்பந்தத்திற்கு இணங்கி, இராச்சியத்தை இரண்டு பங்காக்கியதனால், ஒன்றை யுதிஷ்டிரரும் முற்றொன்றைத் துரியோதனனும் ஆளலானார்கள் யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தையும், துரியோதனன் அத்தினபுரத்தையும் தலைநகரமாகக் கொண்டு, தம்தம் சகோதரர்களுடனும் சுற்றத்தார்களுடனும் தனித்தனியே ஆண்டு வந்தனர்.