பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

161

கூட்டலும், திரித்தலும், விரித்தலும் நியதியின்றி உருவும் பொருளும் வேறுபடப் புதிய சொற்கள் பிறக்கும் தொல்காப்பியர் நூற்படி, தமிழ்ச் சொற்கள் நியதி என்றும் பிறழாமல் எளிதிலுணரும்படி வினைபெயர் வகையும், இடம் பால் இயல்பும் சுட்ட எல்லாச் சொல்லுக்கும் என்றும் யாண்டும் மாறாத சில உறுப்புக் களால் உடன் உணர இயற்கையொடு முரணாமல் அமைந்திருப்பதைக் காணலாம்.

உயிரினங்களில் மக்கள் வகுப்பு மட்டுமே கூட்டுறவுக்கின்றியமையாத பேசும் திறம் பெற்றுள்ளது பொருளைக் குறிப்பதே பேச்சின் நோக்கமாகும் பொருள் குறிக்கும் சொற்களே எல்லா மொழிக்கும் அடிப்படை சொற்கள் ஒலிகட்குரிய எழுத்துக்களை உறுப்பாகக் கொண்டிருக்கின்றன. அதனால் , கருதும் பொருளும், பொருள் குறிக்கும் சொல்லும், சொல்லின் உறுப்பாம் எழுத்துமே இலக்கண நூலின் இயற்கைப் பகுதிகளாகும் இவ்வியலின் முறைப்படி தொல்காப்பியர் இலக்கண நூல், எழுத்து, சொல், பொருள் என முத்திறப்பட வகுக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் இயன் மொழி வளர்ச்சி வரலாறுகளை வரன்முறைப்படுத்தி வகை, தொகை, வரிசைப்படுத்தி ஒழுங்குபடச் சுருக்கி விளக்குகிறது

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' (சொல் 155), 'பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும்' சொல் (156) என்பன தொல்காப்பியர் விதிகள் ஐம்பால் மூவிடம் எல்லா மொழிக்கும் இயற்கை வகைமுறை திணைவகை மட்டும் பிறமொழி எதனிலும் இல்லாத தமிழனுக்குரிய தனிப் பெருஞ்சிறப்பு பொறிகளிற் பிறக்கும் புலனைந்தும் உயிரினமெதற்கும் பொதுவுடைமையாகும். நன்று தீதறிந்து, தீமையை விலக்கி, நன்மையே விரும்பி ஒழுகும் சிறப்பு மக்களின் தனிச் சிறப்பாதலின் ஒழுக்கம் ஒன்றே மக்கட் பஆணப்பட்டது ‘உறுபொத்தல் மக்கள் ஒப்பன்றால்;