பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

செந்தமிழ் பெட்டகம்

றொன்றுமில்லை என்பதனை நினைப் பூட்டுகின்றாள் “தாங்களே முடித்துக் கொண்டமன்றல்” என்று ஒன்று சுட்டுகின்றாள். ஆனால், இன்னும் உண்மையைத் தெளிவாகச் சொல்லவில்லை, தோழி தன் முயற்சியின் பெருமையைப் போரிடும் இருவேந்தரி டையே அமைதியை நிலை நாட்ட முயலும் சான்றோரின் தொண்டோடு ஒப்புமைப் படுத்தி உயர்த்திப் பேசுகின்றாள் இந்த முன்னுரையோடு செவிலியின் காதினையும் மனத்தினையும் தன் வழிப்படுத்திக்கொண்டு உயர்ந்ததொரு செய்தியை எதிர்பார்க்குமாறு அவள் செய்துவிடுகின்றாள்

செவிலி அனுப்பியபடி தலைவியும் தானும் தினைப்புனம் காக்கச் செல்வதனை அவள் கூறத் தொடங்குகின்றாள் சிறிது நெகிழ்கிறது மழை பெய்த புது நீரில் தாங்கள் ஆடியதனைப் கூறித் தழைப் பாவாடை தைப்பதற்குப் பூக்களைத் தாம் கொண்டு வந்ததை அவள் விளக்குகின்றாள் நூற்றுக்குமேல் பூக்களின் பெயர்களைக் கூறுகின்றாள் இன்று இதனைப் படிக்கின்றவர்கள் மனமெலாம் களைத்துப் போகின்ற தாம் இதற்குக் காரணம் பல இந்தப் பூக்கனை நாம் நேரில் துய்த்து அறியாமை ஒன்று

அந்நாளைய மகளிர் தழையுடுப்பதில் ஈடுபட்டுப் பலவகைப் பூக்களிலும் இன்பம் கொண்டு திரிந்து பறித்தமையை இந்நாளில் நாம் அறிய முடியாமை மற்றொன்று பாட்டின் சொல்லின்பத்தினையும் அம் மலர்களைப் பற்றிப் புனைந்துரைகளின் பொருத்தத்தினையும் நாம் மறந்து விடுவது மூன்றாவது தோழியின் மன நிலையைப் பாட்டொடு வைத்து உணராதுபோதல் நான்காவது களவொழுக்கத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இடர்ப்படுகின்ற தோழிக்கு அதனைப்பற்றி எண்ணச் சிறிது பொழுதும் வேண்டும் புதுமை ஒன்றுமில்லாது பழகிய நிலத்திலேயே செவிலியின் மனத்தைக் கொண்டு செல்லுதலும் வேண்டும் இந்த இரண்டு எண்ணங்களும் நிறைவேற வேண்டியே அந்த