பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

செந்தமிழ் பெட்டகம்

தலைவியே சிறந்து விளங்குவதால், பெண்ணினத்திற்குப் பெருமை தரும் காவியமாக இது அமைந்துள்ளது அக்காலத்தில் விளங்கிய சைவம், வைணவம், சமணம், பெளத்தம் ஆகிய சமயங்களில் ஒன்றையும் பழிக்காமல் பொதுமை போற்றுதல் இதன் மற்றொரு சிறப்பாகும் காவியத்தின் இன்னொரு சிறப்பு நாடாளும் வேந்தனை எதிர்த்துப் பெண் ஒருத்தி நீதியை எடுத்துரைத்துப் புரட்சி செய்த பெருமையாகும்

தன் ஆணைக்குக் குறுக்கே வாய்திறப்போர் இல்லாத வகையில் நாட்டிற்குத் தலைமை தாங்கிப் பெரும்படை உடையவனாய் அரசு நடாத்திய வேந்தன், நங்கை ஒருத்தியின் துயரக் கண்ணிரால் கலங்கி உயிர் நீத்தான்; அதனாலேதான், “கண்ணிணிர், கொல்ல உயிர் கொடுத்த வேந்தன் வாழியரோ” (29 வாழ்த்துக் காதை, வாழ்த்து) என்ற வாழ்த்துரையும் அமைகிறது

இக்காவியத்தில் இன்னொரு சிறப்பும் உள்ளது சோழநாடு, பாண்டி நாடு, சேரநாடு என்று முப்பிரிவாக இருந்த நிலப்பரப்பைத் தமிழ்நாடு என்று ஒன்றாகத் தெளிந்து பாடிய புலவரின் ஒற்றுமைக் கனவு அச்சிறப்பாகும் தமிழ்நாட்டுப் படைகளின் ஆற்றலைத் தமிழாற்றல் என்றே அவர் குறிப்பிடுதல் காணலாம் (26 கால்கோட்காதை 16 அருந்தமிழாற்றல்; மேற்படி 185 - தென்றமிழற்றல் , 27 நீர்ப்படைக் காதை 5தென்றமிழாற்றல்)

இவை யாவற்றிலும் சிறந்ததாகப் போற்றத்தக்கது, நூல் முழுதும் விளங்கும் கருத்துத் தூய்மையாகும் ஆசிரியர் இளங்கோவடிகளின் தூய அறநெஞ்சம் ஒவ்வொரு காதையிலும் விளங்குகிறது வேண்டாத வருணனைகளும் அளவு கடந்த புனைந்துரைகளும் இல்லாதது போலவே, வெறுங்காமச்சுவை மிகுக்கும் பகுதி அழகுக் கலைகளைக் கூறும் இடமாயினும், அவளுடன் கோவலன் மயங்கி வாழ்தலைக் கூறும் இடமேயாயினனும், நூலாசிரியர் உயர்ந்த நாகரிக-