பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

51

இலக்கண விளக்கச் சூறாவளி

இது சிவஞான முனிவரால் இயற்றப்பட்டது, வைத்தியநாத நாவலரால் இயற்றப்பட்ட இலக்கண விளக்கத்தை மறுப்பதற்கு இந்நூல் எழுதப் பெற்றது இலக்கண விளக்கத்தைப் பற்றியும் சிவஞான முனிவரைப்பற்றியும் தனிக்கட்டுரைகள் உள்ளன

இலக்கண விளக்கம் :

தொல்காப்பியச் சூத்திரங்களையும் நன்னூற் சூத்திரங்களையும் இந்நூலில் எடுத்திணைத்திருக்கிறார் இதன் ஆசிரியர் இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் கூறுவர் தொல்காப்பியவிதி எல்லோருக்கும் எளிதில் விளங்க இந்நூல் எழுதப்பட்ட தென்பர் இதன் கண் ஐந்திலக்கணமும் கூறப்பட்டுள்ளன இதன் ஆசிரியர் தருமபுர ஆதீன வைத்தியநாத நாவலர் ஆவர் இவர் ஈசானமடம் சுவாமிநாத தேசிகர் காலத்தவர் (17 ஆம் நூ பிற்பகுதி) இந்நூலுக்கு மறுப்பாக இலக்கண விளக்கச் சூறாவளி என ஒரு நூல் சிவஞான முனிவரால் செய்யப்பட்டுள்ளது

இலக்கியம் :

ஒருவன் தன்னுடைய உள்ளத்தில் எழும் கிளர்ச்சிகளைப் பிறனொருவன் உள்ளத்திலும் எழுமாறு செய்ய விரும்பினால் அதற்காக அவன் பயன்படுத்தும் சாதனங்களுள் மொழி என்பதும் ஒன்று மனிதனுடைய உள்ளத்திலும் கிளர்ச்சிகள், கருத்துகள் மூலம் எழும் உணர்ச்சிகள் என்றும் இருவகைப்படும் ஒருவன் இமாழியைக் கண்டு தன் உள்ளத்தில் உண்டான உணர்ச்சிகளைப் பிறர் உள்ளத்திலும் உண்டாகுமாறு செய்விக்கும் நூல் இலக்கியம் ஆகும் மற்றும் இலக்கியம் என்பது படிக்குந்தோறும் நயம் தந்து, உணர்ச்சி வேகத்தோடு உருவ அமைப்பும் உடையதாய் இருத்தல் வேண்டும்