பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

59

படைப்பாற்றல் :

மேலும் புதிய நூல்களைப் படைக்கும் ஆற்றலை வளர்ப்பதிலும் தாய்மொழிப் பயிற்சி உதவும் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறு கதைகள் முதலியவற்றைத் தாய்மொழியில் எழுதும் போது உணர்ச்சியை அப்படியே அமைக்கலாம் அதற்கு வேண்டிய அடிப்படை பள்ளியிலேயே போடுவதும், அதற்கு வேண்டிய வாய்ப்புக்களைத் தருவதும் தாய் மொழிப்படிப்பின் சிறந்த நோக்கங்களில் ஒன்றாகும்

சிறந்த மனப்பயிற்சி:

உலகவாழ்வில் காரணகாரிய முறையில் பொருள்களை உணர்வது என்னும் சிறந்த மனப்பயிற்சி அவசியத்தேவை இது தாய்மொழியின் வாயிலாக எளிதில் எய்தலாம் மேலும் தாய்மொழிப் படிப்பு ஒருவருடைய நிலைத்ததும் ஆழ்ந்ததுமான ஈடுபாட்டைக் கல்வியில் செலுத்தி முறைப்படி ஒழுங்காக வேலை செய்தல், குறித்ததைக் குறித்த மொழியில் வெளியிடல், கலைத்துறைகளிலிறங்கி உழைத்தல் முதலிய நற்பழக்கங்களில் பயிற்சியையும் அளிக்கும் என்றும் மொழிமுறையறிந்த அறிஞர் கூறுகின்றனர்

நாடுவரலாறு - நாட்டுப்பற்று - மொழிப்பற்றுகள்:

தாய்மொழி இலக்கியத்தைப் படிப்பதனால் நாட்டு வரலாறு, வாழ்க்கைமுறை, நடையுடை எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், பொருள், அரசியல், சமய நிலைகள், இசை, கூத்து முதலியவற்றின் நிலைகள், நாட்டில் நிறுவப்பட்ட நிலையங்கள் முதலியவற்றையும் நன்றாக உணர்வதற்கும், அவற்றின் இயல்புகளை நன்றாக ஆராய்வதற்குமான ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கும் வரலாற்றுப் படிப்பினாலோ, கல்வெட்டு, செப்புப் பட்டயங்கள், பழங்கட்டடங்கள், கோயில்கள், நாணயங்கள், அயல்நாட்டினர் குறிப்புக்கள் முதலிய பல