பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

71

எழுதியுள்ளார்கள் பார்ஜி என்ற மொழியைத் திராவிட மொழிகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டுமென்று பேராசிரியர் பரோவும், பேராசிரியர் பட்டாசாரியாரும் 1953-ல் கண்டுபிடித்து எழுதினார்கள் பார்ஜீ எனப்படுவ தனை அம்மொழியினர் 'காப்’ மொழி என்கின்றனர் குடியானவர் என்ற பொருளில் தெலுங்கின்கண் வழங்கும் ‘காபு’ என்ற சொல்லோடு இது தொடர்புடையது

இம் மொழிகளெல்லாம் ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், உலகில் உள்ள பிற குடும்பங்களிற் சேர்த்து வைத்து எண்ணத்தக்கன அல்ல என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள் இந்திய-ஐரோப்பியக் குடும்பத்திலோ, முண்டா மொழிக் குடும்பத்திலோ, யூரல்-ஆல்ட்டேயிக் குடும்பத்திலோ, திபெத்தோ பர்மியக் குடும்பத்திலோ வைத்து இவற்றை எண்ணுதல் இயலாது என்பது மொழியியல் வல்ல அறிஞர் பலர் துணிபு

சில மொழிகளை ஒரு குடும்பத்தின்பாற் சேர்த்தல் கூடுமா, கூடாதா என்பதைப்பற்றிச் சிந்திக்கும்போது சில அடிப்படைக் கருத்துகளைக் கொண்டு ஆராய வேண்டுவது முறைமை ஆகும் அவ்வாறு ஆராயுங்கால், மக்கள் நாள்தொறும் நாழிகைதொறும் பேச வேண்டிய இன்றியமையாமையொடு கூடிய அடிப்படைச் சொற்களைக் குறிப்பிட்ட மொழிகள் பெற்றிருக்கின்றனவா என்றும், அச்சொற்கள் அம்மொழிகளுக்கே உரியனவா, அன்றிப் பிற மொழிகளொடு தொடர்புடையனவா என்றும், தாய் தந்தையர் முதலிய உறவுப்பெயர்களும், உடம்பின் பல்வேறு உறுப்புக்களின் பெயர்களும் ஒன்று இரண்டு போன்ற எண்ணுப் பெயர்களும், நான், நீ, அவன் போன்ற இடப்பெயர்களும் குறிப்பிட்ட மொழிகளின்கண் காணப்படுபவை வேறு தொகுதியான மொழிகளிற் காணப்படுகின்றனவா என்றும் ஆராய்தல் வேண்டும் அல்லாமலும், இலக்கண