பக்கம்:செம்பியன்மாதேவித் தல வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

வ்வொரு கோயிலுக்கும் அதன் புகழ் பாட, சிறப்புக் கூற ஓர் தல வரலாறு உண்டு. அக்குறைக்களைய எழுந்ததுதான் இச்சிறு வெளியீடு.

செம்பியன் மாதேவித் தல வரலாறு கற்றோராலும் மற்றோராலும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களாலும் படித்து வியந்து மகிழ வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். எங்கள் எண்ணத்தை உருவாக்க தல வரலாறு எழுதி முடிக்க தக்கார் ஒருவரைத் தேடினோம். அகன்ற கல்வியும், ஆராய்ச்சித் திறனும் ஒருங்கே அமைந்த உயர் சைவத் திருவாளர் T. V. சதாசிவ பண்டாரத்தாரவர்கள் எங்கள் நினைவுக்கு வந்தார்கள். எங்கள் விழைவினைக்கூறி இசைவைக் கேட்டபோது அவர்கள் தயக்கமின்றி ஒப்புக் கொண்டு எண்ணியபடியே எழுதியுமுதவினார்கள். இத்தல வரலாறு எழுதும் பொறுப்பை திரு. T.V. சதாசிவ பண்டாரத்தார் அவர்களிடம் கொடுத்த செய்தியை உணர்ந்த இம்மாநில அறநிலைய ஆணையர் அவர்கள் மிக மிக மகிழ்ந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

இது காறும் வெளிவந்துள்ள தல வரலாறுகள் பல ஆராய்ச்சியுரை யேதுமின்றி புராணத்தை அடிப்படையாகக் கொண்டு அப்படியே எழுதப்பட்டன.