உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 135 அமர்ந்து இருந்தார். அவருக்குப் பக்கத்தில் இரு இளைஞர்கள் மரியாதையுடன் நின்று கொண்டு பெரியவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர். it' நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லையா? நாம் மேற்கொண்டுள்ள வேலை மிகவும் அபாயகரமானது. ஆதலால் நாம் நிதானமாகத்தான் நடக்க வேண்டும். என்ன இராமு? நீ என்ன சொல்றே?. " புரிந்தது ஐயா! ஆனால் காலம் நீடித்துக் கொண்டே செல்கிறது. இப்பொழுது எதிரி உஷாராகிவிட்ட நிலையில் இனியும் மெதுவாக காரியங்களை மேற்கொண்டால் நமது நோக்கம் தடைபடும்."தனுக்காத்த இராமுத் தேவன் சொன்னார். " ஆம். மகாராஜா. மறவர் சீமையின் மானம் போய் நீண்ட நாட்களாகி விட்டன. தன்மானத்தை இழந்துவிட்டு மேலும் மேலும் கோழைகளாகிவிட அனுமதிக்கக் கூடாது". மற்ற இளைஞனது துடிப்பான பேச்சு. " வீரபாண்டியா நாம் எதற்காக இந்த இரண்டு வருடமாக குடும்பத்தைத் துறந்து சன்னியாசியைப் போல, அலைந்துகொண்டு வருகிறோம். எதற்காக பகலிலும், இரவிலும் பயந்து பயந்து காரியங்களை செய்கிறோம். சாதாரன ஈ, எறும்பு போல நினைத்து, இந்த சமுதாயத்தை ஏறத்தாழ நூறு ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி நமது குலப் பெருமையை அழித்து, நமது முன்னோர் ஜெயதுங்க தேவனின் வாரிககளை நாசமாக்கிவிட்ட மதுரை நாயக்கர்களை பழிவாங்குவதற்குத் தானே" என்று ஆவேசம் அடைந்தவராக தமது பேச்சை நிறுத்தினார். மீண்டும் அவர் தொடர்ந்து சொன்னார்.