சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 173 அந்த மண்டபத்தில் அமர்ந்து கட்டுச்சோற்றை பிரித்து சாப்பிட்ட பெரியவர், வீரபாண்டியன், தனுக் காத்த இராமுத் தேவர் மூவரும் சிறிது நேரம் அந்த நிலவொளியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். I. in o = = - - ஆமாம் சரக்குகளை ஏன் நம்புதாழையில் காலை நேரத்தில் இறக்கினாய்? நமது சரக்குகள் பிடிபட்டவுடன் நமது நடமாட்டம் பற்றி எதிரி எச்சரிக்கையாவதற்கும் ஏதுவாகிவிட்டதே' வீரபாண்டியன் இராமுத் தேவனிடம் கேட்டான்."அது ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி. நெடுந்தீவில் இருந்து நடு இராத்திரியில் புறப்பட்ட தோணி நம்புதாழையின் கடற்கரைக்கு மூன்றாவது சாமாத்திற்கு முன்னமே வந்து சேர்ந்து இருக்க வேண்டும். நடுக்கடலில் காற்று அடங்கி விட்டதால் தோணி சுமார் இரண்டு நாழிகை நேரம் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடியாமல் நின்றுவிட்டது. பிறகு காலை நேரத்தில் சோழகன் காற்று எழுந்த பிறகுதான் புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம் கரையில் சில மீனவர்கள் சரக்குப் பொதிகளைப் பார்த்து கலவரமடைந்த கூக்குரலிட்டதால், கரையில் இறக்கி வைத்த இரண்டு மூட்டைகளை மட்டும் அங்கே போட்டுவிட்டு, மீதமூட்டைகளுடன் சேதுக்கரை தோப்பில் சேர்த்துவிட்டேன்." "சரி யாழ்பாணத்தில் ஆராய்ச்சி என்ன சொன்னார். சாதகமான பதில்தானே"பெரியவர் கேட்டார். "ஆமாம் ஐயா, பாம்பன் கால்வாய்ப் போக்குவரத்தில் அவர்கள் ஆதிக்கம் பெற வேண்டும் என்ற கொள்கையைத்தான் வலியுறுத்தினார். அந்த உரிமையை இருபது ஆண்டுகள் வனுபவித்துக் கொள்ள சம்மதம் ன்பதை தெரிவித்துள்ளேன். அவர்களது உதவி பெற வேறு வழியில்லை. அவரும் ஏற்றுக்
பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/185
Appearance