உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 எஸ். எம். கமால் போக்கர் என்பதையும் அறிந்து கோட்டை சேர்வைக்காரனும் விசாரணை செய்தபொழுது அந்த ஆள் தாம் ஒரு தேசாந்திரி என்றுமட்டும் பதில்கொடுத்து இருக்கிறான். அவனது உடமைகளைச் சோதித்தபொழுது அவனிடம் நூறு பொற்காசிகளும், எட்டையாபுரம் பிரதானி வழங்கிய கடவுச் சீட்டில் "குமாரத்து கோடங்கி நாயக்கர் இராமசேது, பூநீரெங்க யாத்திரை செய்கிறார்" என்று மட்டும் செலங்கில் வரையப்பட்டுள்ளது. இந்த நபரது பதிலில் முரட்டுத்தனமும் சந்தேகம் கொள்ளச்செய்யும் தோரணையும் உடையவனாக இருந்ததால் அவனைக் காவலில் வைத்தனர். எனது விசாரணையின் பொழுது தான் மிகப்பெரிய மந்திரவாதி என்றும் பயமுறுத்தினான். மேலும் விசாரிக்கலாம்." என்று சொல்லிய பிரதானி அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடவுச் சீட்டையும் பொற்காககளையும் மன்னரிடம் கொடுத்தார். அவைகளைப் பரிசோதித்த மன்னர், "இது விஜய நகர பேரரசரின் காசுகள் ஏற்கனவே மகர் நோன்பு திருவிழாவின் பொழுது கட்டாரியுடன் இருந்த காசுகள் போல் இருக்கின்றன. அவைகளைக் கொண்டுவரச் சொல்லுங்கள். அவைகளுடன் சரிபார்க்கலாம்." சில நொடிகளில் அந்தக் காசுகளைக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டன. மன்னரது முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் கவனித்தார் பிரதானி, "நிச்சயமாக இவன் எட்டப்பனது உளவாளி என்மீது கட்டாரியைக் குறி வைத்தவனும் இவன்தான். அன்று கைப்பற்றிய பொற்காககளும் இந்த காசிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. மதுரையில் அக்கசாலை நிறுவி மதுரை நாயக்கர்களுக்கு என தனியாகக் காசுகள் தயாரிப்பதற்கு முன்னர், மதுரை, திருநெல்வேலிச் சீமையில் செலாவவியில் இருந்த பொற்காசுகள் இவை, மதுரை திருமலை நாயக்க மன்னர் இவைகளில் 300 காசுகள் கொண்ட பொற்கிழியை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். ஆதலால் இந்த எட்டயபுரம் உளவாளியை பத்திரமாக வைத்து விசாரணை தொடருங்கள். மேலும் தகவல்கள் கிடைக்கும. எனது மனச்சுமை சிறிது குறைந்துள்ளது. எல்லாம் இராமநாதசுவாமியின் சகாயம்தான்...உம், வேறு செய்திகள்?"