பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. இராமேசுவரம் ஆலயம். சாயங்கால பூஜைக்கான மணி ஒலித்தது. வெள்ளியிலான பூக்குடலை ஒன்றை வலதுகையில் பிடித்தவாறு கலாதேவி ஆலயத்தின் கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து பணிப்பெண் ஒருத்தியும் உடன் சென்றாள். அப்பொழுதுதான் அக்கினி தீர்த்தக் கரையில் சடங்கு களை முடித்து நீராடிவிட்டு கவாதி தரிசனத்திற்காக வந்த வடநாட்டு யாத்ரீகர்கள் குழு அவளுக்கு முன்னே சென்றுகொண்டிருந்தது. தலையில் குடுமி, தோளில் பூணுால், இடுப்பில் பஞ்சகச்சமாக