பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 எஸ். எம். கமால் "ராணி மூன்று நாட்களாக தங்களது வாயில் பச்சைத் தண்ணிர்கூடப் படவில்லை, "ஒரு மடக்கு பால் சப்பிடுங்கள்." கலாதேவியின் பேச்சில் கெஞ்சுதலுடன் வருத்தமும் குழைந்து வந்தன. "கலா நீ விஷத்தைக் கொடுத்தாலும் குடித்துவிடுவேனல்லா? ஆனால் இப்பொழுது எனக்கு மிகவும் தேவையாக இல்லை. பசி... தாகம். தூக்கம் எதுவுமே இல்லை." ராணியின் பலவீனமான உடலில் இருந்து உள்ளன்போடு வந்த சொற்கள் கலாதேவிக்கு மேலும் வேதனையைத்தான் தந்தன. அவளது கண்களில் படிந்து இருந்த கவலைகளையும் வேதனைகளையும் கவனித்த ராணியார், "வருத்தப்படாதே .וויבטי" நான் உடல் நலிவால் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். நீயோ என்னைப் பார்த்து உனது உள்ளத்தில் வீணாக வேதனையை ஏற்படுத்திக் கொண்டு சிரமப்படுகிறாயே!" "எனக்கு பசி இல்லை ராணி" கலாதேவியின் பதில் ராணிக்கு ஆறுதல் அளிக்கவில்லை. "கலா சொல்வதைக் கேள். நீ எனது அன்புத் தங்கை அல்லவா?...இங்கே பார். எனது கர்மாவை நான் தான் அனுபவித்து ஆகவேண்டும். அது இன்பமானதாகவோ, துன்பம் மிகுந்ததாகவோ இருக்கலாம். அறிவுக்கும் உலக நடைமுறைக்கும் உகந்ததாக அதனை அப்படியே அல்லது அந்த இரு தன்மையும் கலந்த சீரான முறையில், எற்று அனுபவிக்க வேண்டியவள் நான்.... நீ என் மீது எவ்வளவுதான் பாசமும் பற்றும் வைத்து என்னைப் போற்றி வந்தாலும் எனது கர்மாவை அப்படியே நீ ஏற்றுக் கொள்ளவோ, அல்லது மாற்றிக் கொள்ளவோ இயலாது. இந்த நியதியை நீ புரிந்து கொண்டாய் எனது இந்த நிலைமையை நன்கு உணர்ந்துகொள்வாய்." ராணியார் தமது பேச்சை முடிக்கும்பொழுது அந்த அறைக்குள் சேதுபதி மன்னர் வந்தார். "உடல்நிலை இவ்வளவு பலவீனமான நிலையிலும் ராணியார்