உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 எஸ். எம். கமால் பிரதானியும் அரண்மனை கார்வாரும் மன்னரை அந்தப்புரத் -திலிருந்து கைத்தாங்களாக வெளியே அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமரவைத்து ஆறுதல் கூயிறறினர். சிறு குழந்தைபோல ஏங்கி ஏங்கி அழுத மனனர் ஒரு நாழிகை நேரம் கழித்து தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு பிரதானியிடம் "மேலும் நடக்க வேண்டியதை கவனியுங்கள்" என்று மெதுவாகச் சொன்னார். "சமுகம் உத்தரவு" என்று சொல்லிய பிரதானி தனது கண்ணிரைத் துடைத்துக் கொண்டு அலுவலகம் நோக்கி வேகமாகச் சென்றார். மன்னர் அருகில் கார்வாரும் ராயசமும் நின்று கொண்டு இருந்தனர். 醬鬱鬱