உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 எஸ். எம். கமால் I 'மரணம் என்பது இந்த உலகில் ஜீவசிருஷ்டிகள் அனைத்திற்கும் இறைவன் விதித்த நியதி. இதில் யாருக்குமே விதி விலக்கு இல்லை என்பதை நீ அறிய மாட்டாயா?" இளந்துறவி கேட்டார். "விளக்கின் ஒளியில் வெம்மை நிறைந்து இருப்பதை அறிந்தும் விட்டில் பூச்சி அந்த விளக்கைவிட்டு அகலாமல் அந்த ஒளியை வலம்வந்து கொண்டே இருக்கிறது. அடுத்து அதன் வெம்மையில் கருகி அழிந்துவிடுகிறது. மனித வாழ்வும் விட்டில் பூச்சியின் செய்கையைப் போன்றதுதான். ஆனால் இந்த உண்மையை மனித உள்ளம் அவ்வளவு எளிதாக அமைதி கொள்வதில்லையே" "சரி. காலம் உனது இதயத்திற்கு ஆறுதலும் அமைதியும் அளிக்கட்டும். எனக்கு முக்கியமான பணிகள் காத்து இருப்பதால் விரைந்து செல்லவேண்டும். எந்த இலக்கினை இலட்சியமாக மதித்து விடுவாசல், உற்றார், உறவினர் பெற்றோரைத் துறந்து நாாேடியாக சன்னியாசி போல இதுவரை அலைந்து வந்தேனோ, அந்த விரதம் பூர்த்தி பெற வேண்டிய நாள் நாளை மறுநாள். அதன் முடிவைப் பொறுத்துத்தான் நமது எதிர்காலம் இருக்கும்" இளந்துறவி தனது முடிவைத் தெரிவித்தார். உடனே கலாதேவிக்கு ஆவேசம் வந்ததுபோல காணப்பட்டாள். நொந்துபோன உள்ளத்தின் வெளிப்பாடாக அவளது வார்த்தைகளும் வந்தன. "இல்லை. நமக்கு எதிர்காலம் இல்லை. எனக்கும் உங்களுக்கும் இனி எந்த தொடர்பும் இருக்க முடியாது." அவள் விக்கி விக்கி அழுதாள். இளந்துவிக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சொல்கிறாய் தேவி எனக்கும் உனக்கும் எந்த தொடர்பும்r - n - - II சொல்ல முடியாமல் இளந்துறவி தவித்தார். சொற்கள் தடுமாறின. இதுவரை எதற்கும் இளந்துறவியின் மனம் தடுமாறியது இல்லை.