பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 345 கலகக்காரர்களின் தலைவர் இளநிதுறவி அடக்க முடியாத சினமும் வெறுப்பும் அவரது கண்களில் பிரதிபலித்தன. பிரதானி, மகாராணி கலாதேவியை அழைத்துச் சென்று பல்லக்கில் அமர வைத்தார். பல்லக்கு சில வீரர்கள் பாதுகாப்பில் வடக்கு நோக்கிச் சென்றது. அதற்குள் மன்னரது மறைவு அறிந்த மக்கள் கூட்டம் தேரின் அருகே அலைமோதியது. வீரர்கள் அவர்களை ஆசுவாசப் படுத்தினர். அங்கு வந்து இறக்கி வைக்கப்பட்ட இன்னொரு பல்லக்கில் கிடத்தியதும் போகிகள் அதனைச் சுமந்தவாறு புறப்பட்டனர். பிரதானியும் வீரர்களும் மன்னரது அந்திமப் பயணத்திற்கு பாதுகாப்பாக குதிரைகளில், இராமநாதபுரம் கோட்டை நோக்கிச் சென்றனர். శ్రీ శ్రీ శ్లో