பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 43 கி.பி. 1649-ல் காளையார் கோவில் பகுதியைத் தம்பியும், திரு வாடானைப் பகுதியை அவரது இளவல் தனுக்காத்ததேவர் என்ற தணக்கத்தேவரும். இராமநாதபுரம் பகுதியை ரெகுநாத திருமலையும் ஆட்சி செய்தனர். அடுத்தடுத்து தம்பியும், தனுக் காத்ததேவரும் இறந்து விட்டதால் ஒருங்கிணைந்த மறவர் சீமை யின் மன்னராக திருமலை ரெகுநாத சேதுபதி விளங்கினார் என்பது இராமநாதபுரம் வரலாறு தெரிவிக்கும் செய்தி. ஆனால் தனுக்காத்தத்தேவர் கி.பி. 1650 முதல் கி.பி. 1673 வரை திரு வாடானைப் பகுதியில் திருக்கோயில்களுக்கும், தனியார்களுக் கும், பதினைந்து நிலக்கொடைகள் வழங்கியதற்கான பதிவுகள் ஆவணங்களில் உள்ளன . இவைகளிலிருந்து இதுவரை இராமநாதபுரம் சீமை வரலாறு எழுதியுள்ள ஆசிரியர்களது ஊகங்கள் உண்மையல்ல என்பதை அந்த ஆவணங்கள் நிரூபிக்கின்றன." இதனைப் போன்றே ரெகுநாத திருமலை சேதுபதியின் மறைவு பற்றிய செய்தியும் அமைந்துள்ளது. இந்த மன்னர் பரிதாபி ஆண்டு ஆனி மாதம் இயற்கை எய்தியாக (அதாவது கி.பி, 1672ல்) இராமநாதபுரம் மானுவல் தெரிவிக்கின்றது." மதுரை தமிழ்ச்சங்க இதழான "செந்தமிழின் கட்டுரை ஒன்றில் இந்த மன்னர் திருப்புல்லாணி பெருமாள் கோயிலின் தேர்த்திரு விழாவினைக்கண்டு களித்த நிலையில் மரணமடைந்ததாகக் குறிப்பிடுகிறது. (இந்த தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திங்களில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.) இந்த மன்னர் திருப்பெருந்துறை திருக்கோயிலின் உச்சிக் காலக் கட்டளைக்கு சர்வமானியமாக சிறுகானுார், பூதகுடி கிராமங்களை சக சகாப்தம் 1598 நள ஆண்டு மார்கழியிலும் (கி.பி. 1676) பில்லுகுடிவை சகம் 1600 - பிங்கல-தை மீ"லும் 4. O S. No. 3/1913 of Provincial court. madras. 5. Boards Misc. Regiter No. 6. Archives of Tamilnadu Madras. 6. Rajaram Rao T. – Manual of Ramnad Samasthanam o р. 22 7. செந்தமிழ் - மதுரை தமிழ்ச்சங்கம் - தொகுதி 6 பக்கம் 44/46