பக்கம்:சேரர் தாயமுறை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயமுறை. (2) இன்னும், வேண்மான்" என்னும் சொல், கோவேந்தர் கோப்பெருந்தேவியரையும், சோவியலார் முடிபுனையாக் குறுமன்னர் தேவியரையும் குறிக்கும் ஒரு பொதுப்பெயராய்ப் பழத்தமிழிலக்கி பங்களிற் பலவிடத்தும் வழங்கக் காண்பாம். சிலப்பதிசாரத்தில் இளங்கோவடிகள் தம்கோத்தமையன் செங்குட்டுவன் கோமனைவியை வேண்மாள்" என்று சுட்டியுள்ளார். ஆண்டு அச்சொல் அத்தேவிக்கு இயற்பெயர் என்று நினைப்பவரும் சிலருளர். உண்மையிலே இது அவளுக்கு இயற்பெயரன்றென்று - ளிதில் தெளியலாகும். “வானவர் தோன்றல் காய்வாட் கோதை விளக்கில வத்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மா நடளிருந் தருளி

  • தம்பியைச் சுட்டும் இனங்கோ”த் தொடரையும் வேண்மாளோடு சேர்த்துச் செங்குட்டுவன் தேவிக்கு இளங்கோவேண்மாள் எனும் தொடர்முழுதும் பெயராய்நிற்பதெனக் கோண்டு, அதனால் அகன் கோத்தேவி (பட்டமஷி)யல்லன் என்றும், மன்னன் பின்னர்மணந்த காதற்கிழத்தியா விருக்கவேண்டுமென்றும் நினைப்பாரும் உளர். அவர்களுக்குக்குப் போதிய ஆகாவு இல்லாததோடு, அது பொருந்தாது எனவும் சிலப்பதிகார அடிகளை ஊன் றிநோக்குவோர்க்கு வெளியாகும். இளங்கோவடிகள் பாடத்தில் மன்ன னுடளிருந்து ம காணச்சென்று மீண்ட தாய் அடிகளின் மருளற்ற செர் தொடர்கள் தெளிவிப்பதாலும், இளங்கோவடிகளைச்சுட்டாமற் கோத் தேவியைத் தனியே குறிக்கும் பிற இடங்களிலெல்லாம் இவ் விளக்கோத் தொடர் தொடுக்காமல் வாளா "மாபெருந்தேவி" காட்சிக்காதை-வரி 110] எனவும், வதுவை வேண்மான் மங்கல மடந்தை-மதியேர் வண்ணங் காணிய வருவழி' (நடுகற்காதை-வரி-51-52] என்ற அடிகளில் 'வேண்மாள் எனவுமே அடிகள் கூறிப்போவதாலும், காட்சிக்காதையின் முதலில் வரும் மேற்குறித்த தொடரிலும் 'இளங்கோ' என்பது வேண்மாளுக்கு அடை யாகாமல் இளங்கோவடிகளையே குறிக்கும் என்பது மலையிலக்காம். மேலும், இளையமனைவி என்ற பொருளில் 'இளங்கோவேண்மான்' என்று குறிப்பதே அடிகள் கருத்தாமேல், அதே காதையில் பின் இவர் பெருங்கோப்பெண் டென்பதை விதமாக்கி ‘மாபெருந்தேவி' எனச் சுட்டி யிருப்பது பொருர்தா தாகும். ஆதலாலும் இத்தொடர் இளங்கோவடிகளையும் கோத்தேலியான வேண்மாளையுமே குறிக்கிற தென்பது தெள்ளிதிற் கொள்ளக்கிடக்கிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/36&oldid=1444775" இலிருந்து மீள்விக்கப்பட்டது