பக்கம்:சைவ சமயம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 13

தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்து” எனவரும் நெடுநெல்வாடை அடிகளாலும்,

'அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று மேலோர் விழையும் நூல்நெறி முாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம்” எனவரும் சிலப்பதிகார அடிகளாலும் நன்குனரக் கிடத்தல் காண்க.

'அரசர் கோவில்களும் தெய்வங்களின் கோவில் களும் சுற்றுமதில் உடையன, உயர்ந்த வாயில் களைப் பெற்றன; அவ்வாயில்கள் மீது உயர்ந்த மண்ணிடுகள் (கோபுரங்கள்) உடையன; அம்மண் ணிடுகளில் வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பது மணிமேகலை மதுரைக் காஞ்சி' முதலிய நூல்கள் நுவலும் செய்தியாகும். இக்கோவில்கள் அனைத்தும் செங்கற்களால் அமைந்தவை.மேலே உலோகத்தகடுகளும் சாந்தும் வேயப்பட்டிருந்தன. இங்ங்னமே உயர்ந்த மாட மாளிகைகளும் இருந்தன.

"விண்பொர நிவந்த வேயா மாடம்" "சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு" "நிரைநிலை மாடத்து அரமியந் தோறும்" 10 இவ்வாறு அமைந்த பெரிய கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களை 下元 சக்கரவாளக்கோட்டம், வரி, 42-48, 58-59; மலர்வனம்

புக்க காதை 118-127. 8. மதுரைக்காஞ்சி, வரி 352-355. 9. பெரும்பாண் ஆற்றுப்படை வரி, 405, 10. மதுரைக் காஞ்சி; வரி. 431,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/12&oldid=678154" இலிருந்து மீள்விக்கப்பட்டது