பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி -ക്ട് 99

13. செருத்துணை:திருவாரூரிற்கோயில் தொண்டு செய்தவர்; இறைவனுக்கெனப் பறித்த மலர்களில் ஒன்றை மோந்தகாரணம் பற்றிக் கழற்சிங்கர் மனைவியை மூக்கறிந்தவர்." -

14. சேரமான் பெருமாள்: எல்லோருக்கும் பொருளை வழங்கியவர்; சிவத்தல யாத்திரை செய்தவர்; நூல்கள் பாடியவர்'

15. திருக்குறிப்புத் தொண்டர்: சிவனடியார் ஆடைகளைத் துவைத்துக் கொடுக்கும் திருப்பணியில் ஈடுபட்டவர்.'

16. சம்பந்தர்: சமணரை வாதில் வென்று பாண்டியனைச் சைவராக்கினவர்; பெளத்தரை வாதில் வென்று சைவராக்கினவர்; தல யாத்திரை செய்து பதிகங்கள் பாடியவர்; சில அற்புதங்கள் செய்து மக்களைச் சைவத்திற் பற்றுள்ளம் கொள்ளச் செய்தவர்.

17. அப்பர். சமணத்திலிருந்து சைவரானவர்; பல்லவ நாட்டிற் சமணர் செல்வாக்கு இழக்கக் காரணமானவர்; தல யாத்திரை செய்து பதிகங்கள் பாடியவர்.

18. நந்தனார்: கோயில் வாத்தியங்கட்கு Cຄ6ຫລຸມ தோல், வார் முதலியனவும் பூசைக்கு வேண்டிய கோரோசனையையும் உதவி வந்தார்; திருப்புன்கூரில் குளம் தொட்டவர்."

19. திருநீலகண்டர்: சிவனடியார்கட்குப் பலவகைத் தொண்டுகள் செய்தவர்." - -

20. திருநீலகண்ட யாழ்ப்பாணர் தல யாத்திரை செய்து, யாழ் வாசித்தவர் மக்கள் உள்ளங்களை இசையால் மகிழ்வித்தவர்; சம்பந்தர் பாட, யாழ் வாசித்தவர்." -

21. நரசிங்க முனையரையார்: அடியார்க்கு உணவும் பணமும் உதவியவர்; திருவாதிரை தோறும் ஒவ்வோர் அடியார்க்கும் உணவும் நூறு பொன்னும் கொடுத்தவர்."

22. நெடுமாறர்: சமணராயிருந்து சைவரானவர்; பாண்டிய நாட்டிற் சைவம் வளர இடமளித்தவர்." -

23. நேசநாயனார்: காம்பீலி நகரத்தினர் அடியார்க்குப் பலவகை ஆடைகளை நெய்து கொடுத்தவர்."

24. பெருமிழலைக் குறும்பர்: அடியார்க்கு வேண்டிய உணவு, உடைகளை உதவி வந்தவர்." - o

25. மங்கையர்க்கரசியார்: குலச் சிறையை ஏவிச் சம்பந்தரைப் பாண்டி நாட்டிற்கு வரச் செய்து, கணவரைச் சைவராகச் செய்தவர்."