பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ச. சைவரது சமுதாய வாழ்க்கை -

மாவிரதிகள், காபாலிகர், சக்தி வணக்கத்தார், பைரவர், அப்பர், சம்பந்தரைப் போன்ற சைவர், சிவயோகியர், பிரமசாரிகள், ஆடையே அற்ற சிவனடியார் எனப்பலவகைப்படுபவர். சிவன் ஆடையின்றியும் அலைபவன்' என்று நூல்கள் கூறலால் அவனடியாருட் சிலர் ஆடையின்றி இருந்தனர் போலும் நரசிங்கமுனையரையர் வீட்டிற்கு இத்தகைய அடியார் ஒருவர் வந்தார்." -

அடியார்கள் எவ்வகை வேடத்தவராயினும் சரி, அவர்களை வரவேற்றுத் திருவடி துலக்கி, உள் அழைத்துச் சென்று இருக்கச் செய்து, உணவு படைத்தலும், அவர் விரும்பியவை கொடுத்தலும் அக்கால வழக்கம் என்பதை நாயன்மார் வரலாறுகள் நன்கு காட்டுகின்றன. சைவர் எந்தச்சாதியினர் ஆயினும்-எந்தத் தொழிலினர் ஆயினும்-தம்மால் முடிந்த அளவு அடியார்க்குத் தொண்டு செய்தனர். அடியாரை மகிழ்வித்தல் ஆண்டவனை மகிழ்விப்பதாகும் என்பது அக்காலத்தார்கருத்து.அடியார்கேட்டார் என்றவுடனேதம் மனைவியை அவர்பால் ஒப்பு வித்த இயற்பகையாரின் அடியார் பக்திக்கு அளவு கூற முடியுமா? மாவிரதியர் கேட்டவுடனே மணப்பெண்ணின் கூந்தலை அறுத்துக் கொடுத்த மானக்கஞ்சாறர் பக்தியை என்னென்பது: அக் கூந்தலை மனமுவந்தளித்த மணப்பெண்ணின் - கலிக்காமர் மனைவியாரின் அடியார் பக்தியை என்னென்பது? மாவிரதிகள், ஆண்டார், தவசிகள், சிவயோகியர், மாகேசுவரர் முதலிய பலதிறப்பட்ட அடியார்கண்ள உண்பித்தலே சிறந்த தொண்டாகக் கருதப்பட்டது. அமுது படைப்பவர் கடைப்பந்தியில் உண்பது வழக்கம்." சோழர் காலத்தில் இக்காரணம் கொண்டே அறச்சாலைகள் தோன்றின. ஒவ்வொரு கோயிலிலும் அடியார்களை உண்பிக்க நிவந்தங்கள் விடப்பட்டன. மடங்களிலும் குகைகளிலும் அடியார்களை உண்பிக்க வசதிசெய்து தரப்பட்டன."துறவுள்ளமும் சிவத்தொண்டில் ஈடுபாடும் கொண்ட பெண்மணிகள் அரசர்கள் மதிப்பையும் பெற்றிருந்தனர் என்பது, "திருவொற்றியூரம்மை என்ற பெண்பால் துறவியின் வேண்டுகோட்படி மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1204-இல்) வியாகரணதான பெருமாளுக்கும் அம்மனுக்கும் நகைகளையும் குளப்பாக்கம் என்ற கிராமத்தையும் வழங்கினான்" என்னும்

கல்வெட்டுச்செய்தியால் நன்கறியலாம். * : : -

அடியார்கள் அரசர்க்கு ஆகமம் படித்து விளக்கல் உண்டு.

அதனைக்கூறும் அடியவர் ஆசனத்தின்மேலிருந்து கூறலும், கேட்கும் அரசன் தரைமீதிருந்து கேட்டலும் வழக்கம்“அடியார்கள் சைவ அரசர் அரண்மனையுள் எந்தநேரத்திலும் நுழையும் உரிமை பெற்றிருந்தனர்.