பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம்

கற்கால நாகரிகத்தைச் சேர்ந்தது." அது அநாரியர் வழிபாடு; வேதகாலத்திற்கு முற்பட்டது. உருத்திரனைப் பற்றிக் கூறும் இடங்களில் லிங்கம் கூறப்படவில்லை. எனவே, லிங்கம் உருத்திரனைக் குறியாது; வேதங்களிற் கூறப்பட்டுள்ள வேறு எத்தெய்வத்தையும் குறியாது. கற்காலப் பொருள்களில் லிங்கங்களும் கிடைத்துள்ளன." டாக்டர் R.G. பந்தர்க்கரும் இதே கருத்தினைக் கூறியுள்ளார்." பீடம் வேள்விக் குண்டத்தையும் லிங்கம் அனற்பிழம்பையும் குறிக்கின்றன என்று கூறுவாரும் உளர்."

லிங்கம் என்ற சொல் பண்டை நூல்களில் இல்லை. எனினும் தமிழகத்தைச் சேர்ந்த குடிமல்லம், களத்தூர், குடுமியான்மலை என்னும் இடங்களில் கி.பி.2-ஆம் நூற்றாண்டிலேயே லிங்கங்கள் இருந்தன. என்பது முன்னரே கூறப்பட்டதால், லிங்க வழிபாடு பல்லவர்க்கு முற்பட்ட தமிழகத்தில் இருந்தது என்பதை உணரலாம். கல் லிங்கத்தைப்போல மரத்துண்கள் பலர் கூடும் பொது இடங்களில் (அம்பலங்களில்) பல ஊர்களில் இருந்தன. ஒவ்வொன்றிலும் தெய்வவுருவம் எழுதப்பட்டிருந்தது. மக்கள் அத்துண்மீது மலர்களைச் சூட்டினர்; அதன் அருகில் அவியாவிளக்கு ஏற்றி வைத்தனர்."அங்குப் பலவகை வாத்தியங்கள் முழங்கப்பட்டன." இந்த மரத் தூண்கள் அழிந்துபட்டன. குடிமல்லம் முதலிய இடங்களில் உள்ள பீடமற்ற லிங்க வடிவமான கற்றுண்களைப் போலவே இம் மரத் தூண்களும் இருந்தனவோ, என்னவோ தெரியவில்லை. பீடமற்ற பழைய கல் லிங்கங்கள் இரண்டு காஞ்சி.ஏகாம்பரேசுவரர் கோயிலில் இன்றும் உள்ளன." சிவபிரான் ஆலமர் செல்வன் என்று பழைய நூல்களிற் குறிக்கப்படலால், தட்சிணாமூர்த்தி வடிவமும் பண்டைக் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.

விழாக்கள் -

1. கார்த்திகை விழா - கார்த்திகை மாதக் கார்த்திகையன்று

இரவில் தெருக்களில் விளக்கு வைத்து மாலைகளைப் போட்டு மக்கள் விழாக் கொண்டாடினர்." இது இன்று முருகனைப் பற்றியது.

2. திரு ஆதிரை விழா - இது மார்கழி விழா என்றும் பெயர் பெறும். சிவபிரான் ஆதிரை முதல்வன் எனப்பட்டான்." இது சிவத் தொடர்பான விழா.இதனை இன்றும் சிதம்பரத்திற்சிறக்கக் காணலாம். 3. தை விழா - தைந்நீராடல், இஷ்ட தெய்வங்களை வணங்கு தல்..' இதுவே பிற்கால மார்கழி நோன்பு என்று அறிஞர் கூறுவர்.' அஃதாயின், இது சைவ வைணவர் இருவர்க்கும் உரிய விழாவாகும்.