பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ச. பிற்காலப்பல்லவர் காலத்தில் சைவ சமயம்-1

இந்த அபராசிதனை வென்று ஆதித்த சோழன் (சுமார் 886 இல்) தொண்டைநாட்டைக்கைப்பற்றிக்கொண்டான்.இவனுடன் பல்லவப் பேரரசு முடிவுற்றது."

வேறு பல்லவ மன்னர் : கம்பவர்மன், வைரமேகவர்மன், சந்திராதித்தன் என்ற பல்லவ அரசர் கல் வெட்டுக்கள் சில கிடைத்துள்ளன. அவர்கள் நிருபதுங்கன், அபராசிதன் காலத்தில் மாகாணத் தலைவர்களாக இருந்தவர் போலும்! சந்திராதித்தனால் மேலைச்சேரி - ரீ சிகரிபல்லவேசுரம் என்னும் குகைக் கோயில் சிங்கபுரத்தில் (செஞ்சி வட்டம்) குடையப்பட்டது." தாமல் கோட்டத்துப் பொய்கை நல்லூர்ச் சிவன் கோயில், வைரமேகவர்மன் ஆட்சியில் குறிக்கப்பட்டுள்ளது." கம்பவர்மன் காலத்தில் வேலூரை அடுத்த சோழபுரம் கோயில் குறிக்கப்பட்டுள்ளது." கம்பவர்மன் காலத்தில் திருவொற்றியூரில் ஒரு மடம் இருந்தது. அதன் தலைவர் பெயர் நிரஞ்சன குரவர் என்பது." காவேரிப்பாக்கம் கல்வெட்டில் "மடத்துச் சத்தப் பெருமக்களிடம் விளக்கு எண்ணெய் வாங்கப் பொன்தானம் செய்யப்பட்டது' என்பதைக் காணக் கோயிலை அடுத்து மடம் இருந்ததும், அக்கோயில் ஆட்சியைச்சத்தப்பெருமக்கள் கவனித்து வந்தனர் என்பதும் தெரிகின்றன. கூத்திகள் அடிகள்மார்;'

மாணிக்கத்தார்' எனப் பட்டனர்.

கோயில் ஆட்சி: திருவொற்றியூர் போன்ற பெரிய கோயில் ஆட்சி 'அமிர்தகணத்தார் என்ற தனிக் கூட்டத்தாரிடம் இருந்தது. அக்கூட்டத்தார் ஊரவையார் மேற்பார்வையில் இருந்தனர்.” காவேரிப்பாக்கத்தில் இருந்த நடுத்தரக் கோயில் போன்றவை மடத்தார் மேற்பார்வையில் இருந்தனவாகலாம். குடிமல்லம், கூரம், திருமுக்கூடல், திருக்கோவலூர், திருவல்லம், தொண்டூர், திருநின்றவூர், திருக்கோடிகா, திருத்தவத்துறை, திருத்தணிகை முதலிய ஊர்க் கோவில்கள் ஊரவையார் மேற்பார்வையில் இருந்தன என்று கருதுதல் பொருத்தமாகும்."

முடிவுரை

இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளிலிருந்து கீழ்வரும்

உண்மைகளை உணரலாம்:

1. தனிப்பட்ட அரசர் எச்சமயத்தவராயினும், அரசாங்க சமயம்

சைவ சமயமாக இருந்தது. நந்தி முத்திரை, கட்டுவாங்கக்கொடி, நந்தி முத்திரையிட்டநாணயங்கள் என்பன இவ்வுண்மைக்குச் சான்றாகும்.