உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

சோழர் சரித்திரம்

________________

அரசியல் 101 தும் தானைத்தலைவர் சோழிய ஏனதி என்னும் பட்டம் பெறுதற்குரியராவர். இவர்கள் வேறு நாட்டின் மீது போருக்குச் செல்லும்பொழுது சொந்த நிவாள், கொற்றக் குடை, வீரமுரசு இவற்றை நன் முகத்திற் புறப்படச் செய்தல் வழக்கம். இங்கனம் செய்தல் வாணாட்கோள், குடைநாட்கோள், முரசுநாட்கோள் எனப்படும். இவர் வஞ்சிசூடிப் பகைமேற் செல்லும்பொழுது தம் படையா ளர்க்குப் படைக்கலம் முதலியனவும், பரிசிலர்க்குப் பொரு ளும் கொடுப்பர். போரினை மேற்கொண்ட பின்னாளிலே படைத்தலைவர்க்கும் படைகட்கும் பெருவிருந்து செய்து மகிழ்விப்பர். இதனை, "பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை " என்பர் தொல்காப்பியர். 'வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றை ஞான்று தானே போர் குறித்த படையாளரும் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயினபெருஞ் சோற்று நிலை ' என்பர் நச்சினார்க்கினியர். இங்கனமாய போர் முறைகள் பலவும் தொல்காப்பியப் புறத்திணையியல் முதலியவற்றான் அறியப்படும். இவை போல்வன ஏனைச் சேர பாண்டிய வேந்தர்கட்கும் பொதுவாவன என்க. இவர்கள் சேனைத் தலைவர்க்கு ஏனாதி என்னும் பட்டம் அளித்தல் போன்றே அமைச்சர், கணக்கர், வேளாளர் முதலாயினார்க்குக் காவிதி என்னும் பட்டமும், வணிகர்க்கு எட்டி என்னும் பட்டமும் அளித்து அதற்கு அடையாள மாகப் பொன்னாற் செய்யப்பட்ட பூவினை அளிப்பர். அவை எட்டிப்பூ, காவிதிப்பூ எனப்படும். இவ்வேந்தர்கள் பிறந்தநாள் ஒவ்வோராண்டிலும் சிறப் பாகக் கொண்டாடப்பெறும். அப்பொழுது இவர்கள்