உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

சோழர் சரித்திரம்

________________

சோழர் குடி விழாவை ஏற்படுத்தியவன், கங்கையும் கடாரமுங் கொண்டு டவன், கல்யாணியை வென்றவன், தொப்பத்துப் போரிலே வென்று போர்க்களத்தில் முடி கவித்தவன், குந்தளரைக் கூடல் சங்கமத்து வென்றவன், அபயன், விக்கிரம சோழனுலாவும் இது போன்றே கூறிவந்துளசி எனினும், இரண்டிலும் சிற்சில வேறுபாடுகள் உள்ளன. காசிபன் மகன் மரீசி என உலாக்கூறுகிறது லாவில் கரிகாலன் முன்னும், பாணியில் செங்கணான் முன்னும் கூறப் படுகின்றனர். வேறு சில வேற்றுமைகளும் உள்ளன. இரண்டிலும் பல அரசர்கட்குப் பெயர் கூறாமல் அன்னோர் புரிந்த அருஞ் செயல்கள் மாத்திரமே கூறப்பட்டுள்ளன. திருவாளர் டி. ஏ. கோபிநாத ராவ், எம். ஏ. அவர்கள் எழுதிய சோழ வமிச சரித்திரத்தில் பின் வருமாறு கூறப் பெற்றுளது : சோழர்கள் சூரிய வமிசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வைவச்சுதமனுவினிடமிருந்து பரம்பரையாயிழிந் தவர்கள் என்று அடியில் வரும் பௌராணிகவழியைத் தமக் குக் கற்பித்துக்கொள்கின்றனர். வைவச்சுதமனு, சூரிய வமிசஸ்தாபகனான இஷ்வாகு, முசுகுந்தன், (இவன் மகனாகிய) வல்லபன், சிபி. இச்சிபியின் பின்பு சோளன், இராசகேசரி, பாகேசரி, இராஜேந்திரமிருத்துஜித், வியாக் கிரகேது, அரிகாலன் முதலியவர்கள் ஆண்டதாகச் சொல்வது வழக்கம். இவை எல்லாம் சோழர் சூரிய வமிசத்தவர் என்று தொடர்பு படுத்திக் காட்டுதல் காண்க. சூரிய வமிசத்தில் மாந்தாதா என்னும் சக்கரவர்த்திக்கு மக்கள் மூவரென்றும் அவருள் முசுகுந்தன் ஒருவனென்றும் பாகவதம் முதலிய