உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

சோழர் சரித்திரம்

________________

18 | சோழர் சரித்திரம் பின்னும், கந்தபிரானுக்குரியவாகும் வெள்ளிக்கிழமை, கார்த்திகை, கந்த சஷ்டி என்னும் விரதங்களின் மேன்மை யும், பெரியோர் பலர் அவற்றை அநுட்டித்துப் பேறுபெற்ற வரலாறுகளும் விசிட்ட மிக்க வசிட்ட முனிவரால் அறிந்து தானும் அவ்வாறே அவற்றை அநுட்டித்துச் சிறப் பெய்தினன். மற்றும் இம் மன்னர் பெருந்தகை, பொன்னுல காளும் புரந்தரனானவன் வலன் முதலிய அவுணர்களுக்கு ஆற்றானாகித் தன்னைத் துணைவேண்டிய காலத்தில் வானுல கடைந்து அவுணர்களை வென்று வாகை மிலைந்தனன். அப் பொழுது, இந்திரன், தனக்குச் செய்த உதவிக்குக் கைம்மாறளிக்க விரும்பி, கற்பகத்தரு முதலிய சிலவற்றைத் தவிர்த்து யாது வேண்டினும் தருவதாகக் கூறினன். கூறலும், இம்மன்னன், முன்பு திருமாலால் பூசிக்கப் பெற்றதும், பின் திருமாலிடமிருந்து பெற்று இந்திரன் பூசித்து வருவதுமான தியாகேசர் திருவுருவைத் தருமாறு பரமசிவனுடைய திருக்குறிப்பின்படி வேண்டினன். இந் திரனோ ஆன்மலாபப்பேறு கருதித் தான் வழிபட்டுவரும் அவ்வருட் குறியினைத் தருதற்கு மனமிலனாய், அதுபோலும் வேறு ஆறு திருவுருவங்களைத் தேவதச்சனைக் கொண்டு இயற்றி வைத்து, 'இவற்றுள் யாது வேண்டினும் பெறுக ' என மொழிந்தனன். முசுகுந்தன் இவ்வேழினுள் எதனைப் பெறுவதென்று தடுமாற்றமெய்தி, பின்பு திருமாலும் இந்திரனும் வழிபாடு செய்த அவ்வுருவையே திருவருட் பாங்கால் உணர்ந்து வேண்ட, புரந்தான் வேறு செய்வதற் குரிய வழியிலனாய் அவ்வேழு படிவங்களையும் பெறுமாறு அளித்தனன். முசுகுந்த வேந்தனும் அவைகளைப் புவியின்கட் கொணர்ந்து, திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்கா சாயல், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு,