பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

சோழர் சரித்திரம்

________________

30) சோழர் சரித்திரம் வேண்டியவாறு திரிபிலக்கணம் கூறுவது நன்றன்று ; சிபியே செம்பியன் என்று கூறப்படுகிறான் : "புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற் சினங்கெழு தானைச் செம்பியன் மருக --புறம் என்பது காண்க.) இனி, பண்டைத் தண்டமிழ்ப் புலவர் பலரும் இவ்வா லாற்றினை யெடுத்துப் பாராட்டு தலைப் பின்வரும் மேற்கோள் களான் அறிக : ஒரு புலவர், ஓர் சோழனை விளிக்குமிடத்து 'புவியில் வாழ்வோருடைய வருத்தம் தீரும்படி ஞாயிற்றின் வெம்மை யைத் தாங்கிக்கொண்டு காற்றையுண்டு வானிலே திரியும் முனிவரும் வியக்குமாறு புறாவின் வருத்தத்திற்கு அஞ்சித் துலாம் புகுந்தோனது வழியில் வந்தோனே ' என்கின் றனர். அது, "நிலமிசை வாழ்க நலமால் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தி னேறு குறித் தொரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா வீகை யுரவோன் மருக -புறம் என்பது. "புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவி லுடம்பரிந்த கொற்றவன் என்று சிலப்பதிகாரத்திலும்,