பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

சோழர் சரித்திரம்

________________

461 சோழர் சரித்திரம் என்னும் செய்யுட்களாற் பெறப்படுகின்றது. அடியார்க்கு நல்லாரும் இவ்விரு செய்யுட்களையும் மேற்கோளாகக்காட்டி, 'சாத்தன தருளால் தான் பெற்ற செண்டினாலே அதனை அடித்துத் திரித்தனன் ' என உரை கூறினார். இமயமலையைச் செண்டால் அடித்ததென்னும் செய்தி இத்தகைய தென நம்மால் அறியக்கூடவில்லை. இதுபோல்வதொரு செய்தி திருவிளையாடற் புராணத்திலும் கேட்கப்படுகின்றது. அஃது உக்கிர குமார பாண்டியர் மேருவைச் செண்டால் அடித்தார் என்பது. கரிகாலன் இலங்கை மீதும் படையெடுத்துச் சென்று அந்நாட்டு மன்னனை வென்று சிங்களக் குடிகள் பலவற்றைச் சிறைப்படுத்து மீண்டனன் என்று மகா வமிசம் என்னும் இலங்கைச் சரித்திரத்தால் அறியப்படுகின்றது. இனி, இவ்வேந்தர் பெருமானது வள்ளன்மையை, இவன், பட்டினப்பாலை பாடிய உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பைம்பொன் பரிந்தளித்தமையே புலப் படுத்தா நிற்கும். இவன் இன்ன பரிசில் அளித்ததனை, " தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன் பத்தொ டாறு நூ றாயிரம் பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. இங்கனம் நீதியினும் வீரத்தினும் வண்மையினும் மேன்மையுற்று விளங்கிய மன்னர் பெருமானாகிய கரிகாலன் தனது நாட்டை வளம் படுத்துவதிற் கண்ணும் கருத்துமாய் இருந்தானாவன். நாட்டை வளம்படுத்து தலாவது வேளாண்மை, வாணிகம், கைத் தொழில், என்பவற்றால் நாட்டின் செல்வத்தைப் பெருக்குத லாகும். இவற்றுள்ளும் வேளாண்மையே முதலாகக் கருதப் படற்பாலது.