உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

சோழர் சரித்திரம்

________________

கரிகாலன் 55 மன்னனாகிய ஆட்டனத்தி என்பான். இவ்விருவரும் சோணாட்டிலுள்ள கழார் முன்றுறையில், புதுப்புனல் விழா விற்குச் சென்று கரிகாலன் காண நீரில் விளையாடுகையில், காவிரியானது அத்தியை வவ்விச்சென்றது. ஆதிமந்தி தன் காதலனைக் காணப்பெறாது வருந்தி, காவிரி வழியே ஓடிக் கடல் மருங்கெய்திக் கூவி அரற்றி, பின்பு மருதி யென்பா ளால் அவனைக் கண்டு தழுவிக்கொண்டு போந்தனள் என்பது. இச்செய்தி, சோணாட்டிற் பிறந்த பத்தினிப் பெண்டிர் சிலருடைய பெருமைகளை எடுத்துக் காட்டி, அங்கே பிறந்த யானும் ஓர் பத்தினியாயின் இவ்வாசபோடு இந்நகரையும் ஒழிப்பேன் என்று கண்ணகி வஞ்சினஞ் கூறுமிடத்தில் இளங்கோவடிகளால் உரைக்கப்பட்டுளது. "மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் றன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின் சென்று கன்னவி றேளாயோ வென்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட வவனைத் தழீ இக்கொண்டு பொன்னங் கொடி போலப் போ தந்தாள் - - சிலப்பதிகாரம், வஞ்சினமாலை என்பது காண்க. ஆதிமந்தியின் கணவன் பெயர் ஆட்ட னத்தி என்றும் அத்தி என்றும் அகப்பாட்டுகளிற் கூறப் பெற்றுளது.*

  • "ஆட்டனத்தி நலனயந் துரை இத்

தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின் மாதிரந் துழைஇ மதிமருண் டலந்த ஆதி மந்தி காதலற் காட்டிப் படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி யன்ன மாண்புகழ் பெறீ இயர் 11 - அகம், 222