உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சோழர் சரித்திரம்

________________

66. ' சோழர் சரித்திரம் இதிலுள்ள உவமை நயம் முதலிய அழகுகள் கற்றோர் நெஞ் சைப் பிணிக்குந் தன்மையன. இனி காவிரிப்பூம் பட்டினம் இவன் காலத்திலேயே கடலாற் கொள்ளப்பட்டதென்றும், இவன் வேறிடத்தை யடைந்தானென்றும் மணிமேகலை கூறுகிறது. இவன் அடைந்த வேறிடம் உறையூரோ காஞ்சிநகரோ தெரியவில்லை. புகார் கடல்கோட்பட்டபின் மாதவி மகளாகிய மணிமேகலை காஞ்சிப் பதியை அடைந்தபொழுது அந்நகரத்தில் தொடுகழற்கிள்ளி யென்னும் சோழனொருவனும் அவனுக்குத் தம்பியாகத் துணையிளங்கிள்ளி யென்பானும் இருந்தாராக அக்காப்பியம் கூறுகிறது. அன்னார் கிள்ளிவளவனும் அவன் தம்பியுமாயின் அவர்கள் காஞ்சியை அடைந்தாராவர். இவ்வேந்தன் முடிவில், சேர நாட்டிலுள்ள தாகிய குள முற்றம் என்னும் இடத்தில் நடந்த போரில் உயிர் துறந்தா னாவன். அதனால் இவன் பெயர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப் பின்பு வழங்குவதாயிற்று. இவனைப் பாடிய புலவர்கள், புறத்தில், ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், மாறோகத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், கோவூர்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், நல்லிறையனார், எருக்காட் நீர்த் தாயங்கண்ணனார் என்போரும், அகத்தில், நக்கீரரும் ஆவர். இவருள் நப்பசலையார் பெண்பாலராயிருத்தல் வேண்டும். இவர்களில், இவ்வரசன் துஞ்சியபின்னரும் இருந்து பிரிவாற்றாது வருந்திப் பாடியவர்கள் மாறோகத்து நப்பசலையாரும், ஆடுதுறை மாசாத்தனாரும், ஐயூர் முடவ னாரும் ஆவர். இன்னோர் இரங்கிக் கூறியவை நெஞ்சை உருக்குந் தன்மையன. நப்பசலையார், பொன்னானியன்ற மாலையினையும், நெருங்கிய போரின்கண் எதிர்நின்று வெல்