உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

சோழர் சரித்திரம்

________________

நலங்கிள்ளி 71 வறுமையால் வருந்தி வந்தோர்க்கு அருள் புரிவாயாக ' என் றும் ; ' தீயோரை ஒறுத்தலும் நல்லோர்க்கு அருள் பண்ணு தலுமாகிய முறைமையின் மடிந்திராது, நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லையென்போர்க்கு இனமாகா தொழிக; விழவின்கண் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம் போல முறை முறையே தோன்றி இயங்கி இறந்து போகின்ற இவ்வுல கத்தில் நின்சுற்றம் மகிழ்ச்சியிடத்ததாக ; நீ பாதுகாத்த பொருள் புகழிடத்ததாக ' என்றும்; பிறவாறும் அவற்றிற் கூறப்பட்டுள்ளன. முன்பு போர் செய்து வெற்றி கொள்ளு தலையே பொருளாகக் கொண்டிருந்த இம்மன்னன் முதுகண் ணன் சாத்தனாரால் அறிவுறுத்தப் பெற்று அறஞ் செய்தலை மேற்கொண்டனாவன். இனி, இவ்வேந்தன் கவிதை யியற்றும் வளமுடைய சிறந்த புலவனாகவும் விளங்கினனென இவன் பாடிய இரண்டு அழகிய செய்யுட்கள் புறநானூற்றில் உள்ளமையால் அறியப் படுகிறது. அவ்விரண்டு செய்யுட்களில் ஒன்று மாற்றாரை நோக்கி வஞ்சினங் கூறுவதாக வுள்ளது. அதிலே, ' மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி ஈயவேண்டுமென்று இரப்பரா யின் அவர்க்கு என் அரசாட்சி கொடுத்தலோ எளிது ; இனிய உயிரேயாயினும் கொடுப்பேன் ; ஆற்றலுடையோரது வலி யைப் போற்றாது என் உள்ளத்தை யிகழ்ந்த அறிவில்லா தோன், துயில்கின்ற புலியை யிடறிய குருடன் போல உய்ந்து போதலோ அரிது ; மூங்கிலைத் தின்னும் யானையின் காலில் அகப்பட்ட நீண்ட மூங்கின் முளையை யொப்ப அவ்விடத்து வருந்தும்படி மேற்சென்று பொருதிலேனாயின், குற்றமற்ற நெஞ்சத்தாற் காதல் கொள்ளாத பொது மகளிரது பொருந் தாத முயக்கத்தால் என் மாலை துவள்வதாக ' என்று கூறி யிருப்பது கிள்ளியின் பெருமித வுணர்ச்சியையும், உளத்