உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

சோழர் சரித்திரம்

________________

கோச்செங்கட் சோழர் டியும், பூங்கொத்துக்களைப்பறித்துச் சாத்தியும் நீலகண்டராகிய பெருமானை நித்தலும் வழிபாடு செய்தொழுகாநின்றது. அதனால் திரு ஆனைக்கா என்னும் பெயரும் அத்தலத்திற்கு உளதாகி நிலவுகின்றது. இஃதிவ்வாறாக, ஞான முடையதொரு சிலந்தி யானது நம்பாது செம்பொற்றிருமுடிமேல் சருகு முதலியன் உதிராவண்ணம் மேல் விதானம் என்னுமாறு வாய் நூலால் வலையொன்று செறியப் புரிந்தது. அருமையாக இழைத்த அச்சிலம்பிவலையினைக் கண்டது ஆண்டவரை வழிபடச் சென்ற அவ்வானை ; கண்டதும் ஈதிங்கிருப்பதும் அநுசிதமா மென்று அதனைச் சிதைத்தது. சிலந்தியோ முன்போல் மீண் டும் பந்தர் இழைத்தது. பிற்றைநாள் அதனையும் ஆனை யழித்தது. பார்த்தது சிலந்தி ; சினம் மூண்டது ; 'எம் பெருமான் திருமேனியிற் சருகு விழாமல் யான் வருந்தி யிழைந்த நூலின் பந்தரை இவ்வானை அழிப்பதோ ' என வெம்பிக் கொதித்தெழுந்து யானையின் துதிக்கையுட் புகுந்து கடித்தது. கடிக்கவே யானையானது அதனைப் பொறுக்க லாற்றாது நிலத்திலே கையை மோதிக் குலைந்து வீழ்ந்தது. கையிற் புகுந்த சிலந்தியும் உயிர் துறந்தது. அருமறைப் பொருளாகும் ஐயனும் அம் மதயானைக்கும் தகுமாறு வர மளித்து, சிலந்தியானது சோழர் குலத்துதித்து உலகு புரந் தளிக்க அருள் புரிந்தனர். அக்காலத்தே சோழ குலத்தரச னாம் சுபதேவன் என்பவன் தன் பெருந்தேவியாகிய கமலவதி யுடன் தில்லைத் திருப்பதியை அடைந்து திருச்சிற்றம்பலத்தே திரு நிருத்தம் புரியும் சேவடியை வணங்கித் திருப்படியின் கீழ் வழிபாடு செய்துவந்தனன். தேவி கமலவதியும் இறை வரை வழிபட்டு மகப்பேறு கருதி வரம் வேண்டினள். பெரு மானும் திருவுள்ளஞ் செய்தனர். முன் திருப்பணி புரிந்த சிலந்தி அரசு மகிழக் கமலவதி திருவயிற்றில் அழகிய மகவாய்