பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冷 تهم

லா. ச. ராமாமிருதம் : 韬

ஒரு நிலை என்னை அழுத்துகிறது. அதை விவரிப்ப தற்கு உரிய பாஷையை அதுவே அமைத்துக்கொள்கையில் செளந்தர்யம் நேர்கிறது.

நம்மைச் சுற்றி செளந்தர்யம் நேர்ந்து கொண்டே யிருக்கிறது. ஆனால் அதன் தரிசனம் பார்க்கிற கண்களுக்குத் தான்.

மெளனம் செளந்தர்யத்தின் உச்சக்கட்டம். இந்த மோனத்தை அடைவதற்கு ரீம்ரீமாய் எழுதிக்கொண்டிருக் கிறோம். பேசிப்பேசி அளக்கிறோம். நான் சொல்கிறேன் ‘எழுத்தின் சாக்கில் எழுத்தாளன்தான் நிறைய பேசுகிறான்' பேச்சாளனைக்காட்டிலும்.

இதற்கு விமோசனம் உண்டா? எது விமோசனம்? எதற்கு விமோசனம்? காதில் கேள்வி குறுகுறுக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் இருந்தேன். விபரீதம் ஏதும் இல்லை. ஆனால் தொடர்ந்து சில பரிசோதனைகள் நடத்த வேண்டியிருந்தன. 'குண்டியில் அடித்தால் பல் போச்சு என்று ஒரு கேலி வழக்கு. ஆனால் உடம்பு விஷயத்தில் அது பொய் இல்லை அல்லது பொய்க்காதபடி இப்போதைய வைத்தியர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். பல முறைகள்:- அக்கு பங்ளுர், uțGGTTT swf, eligrrrggsflå, Gurra;rr, naturopathy and so on மார்கட்டில் (ஆமாம் எல்லாமே மார்க்கட்தான்!) புழங்கு கின்றன. தனித்தனியாகவும், கலந்தகட்டியாகவும் அந்தக் கலப்படமே ஒரு சிஸ்டமாகவும் நடமாடுகிறது. வியாதிக் காரனுக்கும் ஒரு சிஸ்டம், உடம்பில் பிடிக்குமளவிற்குப்