பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 & செளந்தர்ய.

பக்தனும் தெய்வத்துக்குத் தேவைப்படுகிறான். இதுதான் இந்த நாமத்தின் சூட்சுமம்.

பயனற்ற ஈடுபாடுகளில் வயது தேய்ந்து கொண்டிருக்கை யில் ஆழ்மனத்தின் அழகு மட்டும் அதன் தன்மையான மெருகை ஆங்காங்கே அவ்வப்போது தன்னை வெளிப் படுத்திக் கொண்டிருக்கையில் சென்றுபோன நாட்களுக்கு ஏங்குவதற்கு நேரமில்லை. கிடைத்ததை கண்ட மட்டும் உன் சக்திக்கு முடிந்தவரை பற்றிக்கொள். மனம் எண்ணங் களை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கும் ஒயாத இயந்திரம். அந்த விசித்திரமே அதன் அடுத்த கட்டமானஉருவெடுப்பது அதற்குரிய பாஷை, அந்த பாஷை ஒசைப்பட செய்த முயற்சியில் தோன்றியது சொல். சொல் செயலாகும் முயற்சி, முயற்சியின் நேர்த்தி அவைகளின் வேறுபாடுகள், வேறுபாடுகளின் பாகுபாடுகள், பதங்கள், பதங்களின் வெற்றி தோல்வி இத்தனைக்கும் ஊடுருவும் மோனத்தின் த்வனி. இந்த ஒட்டு மொத்தமான Process அதன் தனி எடையே ஒர் ஆச்சர்யம்தான்.

ஆச்சர்யப்பட்டுக் கொண்டேயிரு. ஆச்சர்யமே அழகுக்கு அற்புத அர்ச்சனை.

என்னிடம் எழுத்தின் ஆக்கநாட்களில் ஏதேதோ வார்த்தைக் கோர்வையில் நான் எழுதாத நேரங்களில் கூட- ஸ்நானம் செய்கையில்- காலைக்கடன்களில்சாப்பிடுகையில், ஆபீசுக்கு பஸ்ஸில் போகையில் இன்னும் சம்பந்தா சம்பந்தமற்ற நேரங்களில் உற்பத்தி ஆகிக் கொண்டேயிருக்கும். தம்மைத்தாமே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கும். பல சமயங்களில் என்னை மறந்து வாய் திறந்தே உளறிக் கொட்டியிருக்கிறேன். வீட்டார் ஆச்சர்யத்தில் திரும்பிப்பார்ப்பார்கள். “என்னடா சொல்றே? நம் வீட்டில் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும் சுபாவம்