உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 o செளந்தர்ய.

வயிற்றைக் கட்டிக்கொண்டு அழுதால் படிப்பு எப்படி சோபிக்கும்?

'வண்டையம் மாதிரி விழிகள்”

எங்க ஜாதியிலே உன்னை மாதிரி ஒருத்தன் இருந்தா கோயிலே கட்டிடுவோம்.

"அவனிடம் மகமாயி குளிர்ந்து போயிட்டா.” "அவள் மங்கலம் எய்தினாள்.” ‘சாமி விளக்கை மலையேத்து.” ஒருசமயம் நான் வழக்கமாய் வாங்கும் மளிகைக்கடைக் காரரிடம் மிளகின் விலையை ஆட்சேபிக்க முயல்கையில் அவர் சொல்கிறார்: “மிளகின் மேல் மார்க்கட்டு பிரிய மாயிட்டுதுங்க”

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அப்புறம் பேச்சில், சமையலில், சங்கீதத்தில், பழக்கவழக்கங்களில் அந்த ஊர்பாணி, இந்த ஊர்பாணி என்கிறோம். இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம். என்னைப் பொறுத்தவரை இந்த விசேஷமின்றி என்னால் இருக்கமுடியாது. “பத்து மாசம் சுமந்த வயிறாச்சே கொதிக்காமல் எப்படி இருக்கும்.” இதையெல்லாம் பாஷையின் அலங்காரம் என்று சொல்வதா? தொப்புளிலிருந்து வந்த வீரலாகவே இருக்காதா? உள்ளது உள்ளபடி நீரோடை பாஷை என்பதை எல்லாம் மீறி ஆதிமூலம் தன் சொரூபத்தைக் காட்ட வில்லையா? ஆகையால் சகஜத்திற்கு ஒரு தடம் உயர்ந்து பாஷையின் உக்ரஹம் உலாவுகிறது.

பாணி என்கிறோமே அது எந்தத் துறையில் இருந்தாலும் அதன் உச்சரிப்பில் அடைந்துவிட்ட நாஸ்-க்கு- நேர்த்திமுசிறி சுப்ரமணி.ஐயர் பாணி, மதுரை மணி பாணி,