உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ** செளந்தர்ய.

என்னால் எப்பவுமே இனி ஒன்றும் செய்யமுடியாது. செய்வதற்கில்லை. எழுந்து என் அறைக்குச் சென்று கட்டிலில் உட்கார்ந்துவிட்டேன்.

என்னமோ நடக்கிறோம். வருகிறோம். போகிறோம். உன் நினைவில் அந்த அர்த்தமற்ற இயக்கம் தெரிகிறது. உயிர் இருக்கும் வரை இயங்காமல் இருக்கமுடியாது எனக்கு என் வேளை வரும் வரை. இந்த வயசில் அதன் வெறிச்சில் செயலின் வியர்த்தம் தவிர வேறு எதுவும் என்னால் காண முடியவில்லை.

சேகர் உள்ளே வந்து என் எதிரே உட்காருகிறான். அவன் அருகே கண்ணன் கைகளைக் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து கொண்டு நிற்கிறான். இரண்டு மருமகள்மாரும் சுவரோரமாய் ஒடுங்கி நிற்கின்றனர். அவர்களுக்கு ஒன்றும் புரியாது, ஏதோ விபரீதம் என்று தவிர.

அப்பா!

சேகர் குரல் எங்கிருந்தோ வருகிறது. அப்பா என்று சேகர் அழைப்பது அபூர்வம் என்பதை மனம் இப்போது பதிவு செய்துகொள்கிறது. அவன் என்னை ராமாமிருதம் என்று அழைத்தால் அவன் சந்தோஷமாயிருக்கிறான். சேகர் சந்தோஷமாயிருக்க வேண்டும் என்பதே என் ஆசை. பேர் சொல்லி அழைத்தால் குறைந்து போய் விடுவேனா? அந்த எண்ணத்தை எல்லாம் எப்பவோ விட்டாச்சு. என் பெற்றோர்கள் அவர்களைப் பெற்றவர்களின் சந்ததியுடன் அந்த மரியாதை எல்லாம் போயாச்சு. அந்த காலத்தில் அந்த climate இல்லை. அந்த மரியாதைக்கெல்லாம் அர்த்தம் இருந்தது. புஷ்டியிருந்தது. அதில் புனிதமிருந்தது. இப்போ தெல்லாம், நடக்கிறது நடந்துவிட்டுப் போகட்டும் என்று எனக்கே அலகதியம் வந்தாச்சு என்ன வேணுமானாலும்