உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 so செளந்தர்ய.

வந்துவிட்டாள். இது பாவாடை சட்டையில் நான் பார்த்த விசாலமில்லை. கொசுவம் கட்டி, வயதைக் காட்டிலும் இன்னும் பெரியதாய்க் காட்டும் விசாலம் அந்தத் திக்குத் தெரியாத பார்வை போய் விழிகளில் வண்டுகள் பிரகாசித்தன. என்னைப் பார்த்து அவள் கூச்சப்படவில்லை. ஆனால் பேசவில்லை. வாயில் லேசான புன்முறுவல்.

வைத்தியின் அப்பா கண்ணாடி குருக்கள் இப்போது கோயில் பூஜைக்குப் போவதில்லை. எல்லாம் வைத்தி தான.

இந்த இடத்தில் குருக்கள் உத்தியோகம் பற்றி சற்று விவரமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. அந்த நாளில் குருக்கள் பிழைப்பு மிக்கக் கடினமானது. அவர்களுக்கு விடுமுறையே கிடையாது. வைத்திக்கு முருகன் கோயிலில் தான் வேலை. மாதச்சம்பளம் கிடையாது. கோயில் துணில் கட்டியிருக்கும் உண்டியலை அமாவாசைக்கு அமாவாசை திறந்து அதிலிருக்கும் சில்லறையைத்தான்- சில்லறையில் தான் மாதச்சம்பளம் எடுத்துக்கொள்ள வேண்டும். முருகன் கோயிலைத் தவிர வைத்தி நாலைந்து பிள்ளையார் கோயிலுக்கும் பூஜை செய்தான். தனித்தனியாகத் தண்ணிர் அபிஷேகம் கிடையாது. முகத்தில் ஒரு கை தண்ணீரால் பிள்ளையாரை அடித்து ஏற்கெனவே நெற்றியில் ஒட்டி யிருந்த சந்தனத்தை நனைப்பான். காலையில் வடித்த சோறுதான். அந்த ஒரே பாத்திரத்தில் அழுக்கு சிவப்புத் துண்டை மூடி, எல்லா சுவாமிகளுக்கும் நைய்வேத்யம். தன் பூஜைகளை முடித்துக்கொண்டு வைத்தி வீடுபோய் சேர்கையில் மணி ஒன்றாகிவிடும். நைய்வேத்ய சோறு காய்ந்து போய் வேல் வேலாய் விறைத்து நிற்கும். ஆனால் இந்தச் சோறும் வீட்டிற்கு வந்தபின்தான் வீட்டார் சாப்பிட (էԲւգ-ակtD.